Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் ரூ.2,50,000/- சம்பாதிக்கலாம்! – உபயோகமுள்ள‍ தகவல்

15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் ரூ.2,50,000/- சம்பாதிக்கலாம்! – உபயோகமுள்ள‍ தகவல்

15 சென்ட் இடமும் 7 லட்ச ரூபாய் முதலீடும் இருந்தால், மாதம் 2,50,000 சம்பாதிக்கலாம்! – உபயோகமுள்ள‍ தகவல்

எல்லோருமே அரசாங்க வேலை கிடைக்க‍  வேண்டும் என்று எதிர்பார்த் தால், அது இயலாத காரியம். அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கா விட்டால், அவர்களே தங்களுக்கு தெரிந்த அல்ல‍து

அனுபவம் உள்ள‍ அல்ல‍து தெரிந்து கொண்டு, நல்ல‍ தொரு தொழில் தொடங்கி அவர்களும் உயரலாம். நாட்டையும் உயர்த்த‍லாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க‍ விருக்கிறோம்.

பதினைந்து(15)  சென்ட் இடமும் ஏழு லட்ச ரூபாய் (7,00,000/-) முதலீடும் இருந்தால் மாதம் ரெண்டரை லட்சம் (2,50,000/-) வரை சம்பாதிக்கலாம்’’ என்கிறார் காளான் உற்பத்தி யில் சாதித்திருக்கும் மதுரை ஊமச்சி குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார்.

எம்.காம்., பட்டதாரியான ராஜ்குமாரும் பி.பி.இ., படித்த ஸ்ரீ பிரியாவும் காதலித்துக் கரம்பிடித்தவர்கள். பொற்கொல்லரான ராஜ்குமார், பத்து வருடங்களுக்கு முன்பு நகைத்தொழில் நலிவுப்பாதையில் பயணிக்க த் தொடங்கியபோது பெரிதும் பாதிக்கப்பட்டார். வீட்டிலிருந்த பொருட்களை விற்றுச் சாப்பிடும் அளவு க்கு, அவரது பொருளாதார நிலை சுருங்கிய து. கடன் தொல்லை தந்த நெருக்கடியால் இருவரும் தற் கொலைக்கு முயற்சித்தார்கள். சரியான நேரத்தில் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப் பட்டதால் பிழைத்தார்கள்.

புத்துயிர் தந்தது

இப் பின்னணியில் ‘நம்மாலும் வாழ முடியும்’ என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தது பால் காளான் வளர்ப்பு. “அந்தச் சம்பவத்துக்கு ப் பிறகு வாழ்ந்து காட்டணுங்கிற வெறி எங்களுக்குள்ள ஏற்பட்டுச்சு. நண்பர்கள் 6 பேரைச்சேர்த்துக்கிட்டு கொடி முருங்கையை விலைக்கு வாங்கி, வெளிநாட்டுக்கு ஏற்று மதிசெய்ய ஆரம்பிச்சேன். வீட்டுச்செலவு போக, கூடுதலா கொஞ்சம் வருமானம் கிடைச்சுது. அதை மூலதனமா வைச்சு, அடுத்து என்ன பண்ணலாம்னு நாங்க யோசிச்சப்ப காளான் உற்பத்தியைப் பத்தி கேள்விப்பட்டேன்.

பட்டன் காளான், சிப்பிக்காளான், பால் காளான் என மூணு காளான் வகை கள் சந்தையில் இருக்கு. பால் காளான் பத்து நாள் வரைக்கும் கெட்டுப் போகாது. மத்த ரெண்டுக்கும் ஆயுசு ஒரு நாள் தான்.

தமிழ்நாட்டோட தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற தாக இருக்கிறது மட்டுமில்லாம, உற்பத்தி செலவும் பால்காளானுக்குக்குறைவு. அதனா ல, பால் காளான் உற்பத்தியைக் கத்துக்கிட் டோம். இது தொடர்பான பயிற்சி வகுப்புகள்ல ரெண்டு பேருமே கலந்துக்கிட்டோம். பால் காளான் வளர்க்க ஆரம்பிச்ச போது, நஷ்டம்தான் கிடைச்சது.

இருந்தாலும் மனம் தளராம எங்களுடைய அனுபவங்களையே பாடமா க்கி உழைக்க ஆரம்பிச்சோம். உழைப்பு வீண் போகல. பயிற்சியின்போது பதினொன்றுக்கு முப்பத்து மூன்று அடி ஷெட்டுல 10 கிலோ காளான் உற்பத்தி பண்ணலாம்னு சொல்லிக் குடுத்தாங்க. ஆனா, நாங்க அதே ஷெட்டில் 30 கிலோ காளான் உற்பத்தி பண்ற அளவுக்கு நுணுக்கத்தைக் கத்துக் கிட்டோம்’’ முகம் பிரகாசிக்கச் சொல்கிறார் ராஜ்குமார்.

எப்படி வளர்ப்பது?

பால் காளான் விதைத்த 35-வது நாளிலிருந்து மகசூல் கொடுக்கும். ஒரு விதைப்புக்கு மூன்று முறை அறுவடை எடுக்கலாம். விதைத்த அறுபதா வது நாளில் மொத்த அறுவடையும் எடுத்துவிட்டு, அடுத்த விதைப்புக்குத் தயாராக வேண்டும். 350 கிராம் எடை கொண்ட பால் காளான் பாக்கெட் விதை 40 ரூபாய்.

ஒரு கிலோ பால் காளான் 150 ரூபாய். 50 கிலோ பால் காளான் உற்பத்தி செய்வதற்கு 500 லிட்டர் தண்ணீரும், 60 யூனிட் மின்சாரமும் தேவை. வேலைஆட்களும் அதிகம் தேவையில்லை. இவர்களுடைய பண்ணையில் நிறுவிய 3 பேர் தவிர, வேலைக்குத் தனியாக மூன்று பேர் இருக்கிறார்கள்.

’’கடினமான வேலை இல்லைன்னாலும், இன்கு பேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையைப்போல் காளானை ரொம்ப கவனமா வளர்க்கணும். காளா ன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட வைக் கோலுடன் வெல்லம் சேர்த்துக் கால்நடைகளுக்குக் கொடுத்தால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம். காளான் களுக்குச் சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறதால, இன்னும் பத்து வருஷத்துக்கு இந்தத் தொழிலில் போட்டியே இருக்காது.

நிச்சய வருமானம்

நாங்கள் உருவாக்கிக் கொடுத்த காளான் பண்ணைகளை வைத்து, மாநிலம் முழுக்க 40 குடும்பங்கள் பிழைத்துக் கொ ண்டிருக்கின்றன. குறிப்பாகச் சென்னை ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்பவர்க ள் காளான் வளர்ப்பில் அதிக ஆர்வமாய் இருக்கிறார்கள்.

காலத்துக்கேற்ப நவீன உத்திகளையும் கையாண்டு வருவதால், உற்பத்தி செலவு இன்னும் குறையும். இப்போது மாசம் 2000 கிலோவரை பால் காளான் உற்பத்தி செய்கிறோம். இதுல ரூ. 3 லட்சம் வருமானம் கிடைக்கு ம். எல்லாச் செலவுகளும் போக, எங்களுக்கு மாசம் ரூ.2 1/2 லட்சம் கையில தங்கும்.

15 சென்ட் இடமும் ஏழு லட்ச ரூபாயும் இருந்தால் இதே வருமானத்தைப் பெற முடியும். அது மாத்திரமில்லாமல், ஆறே மாதத்தில் போட்ட முதலீட்டை எடுத்துட லாம்’’ உத்தரவாதமாகச் சொல்கிறார் ராஜ்குமாரின் மனைவி ஸ்ரீ பிரியா.

ராஜ்குமார் தொடர்புக்கு: 09952493556
=> இந்து

0 Comments

Leave a Reply