Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் அன்புக்குரிய விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய நான்,உங்களுக்கு எழுதும் அன்பு மடல்

அன்புடையீர்!

வணக்க‍ம்!

உங்கள் அன்புக்குரிய விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய நான்,உங்களுக்கு எழுதும் அன்பு மடல்

க‌டந்த ஐந்து ஆண்டுகாலமாக வாசகர்களின் அமோக ஆதரவு பெற்று vidhai2virutcham.com இணையம் பல சிறப்பான தகவல்களையும் செய்திகளையும் உங்களுக்கு பகிர்ந்து வருகிறது. இதில்

ஆன்மீகம், சமையல் குறிப்பு, அதிசயத் தகவல்கள், மருத்துவம், வெள்ளித் திரைச் செய்திகள், கவிதைகள், சிறுகதை, சமூக கட்டுரைகள் உட்பட பல பயனுள்ள தகவல்களை வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. இதில் விதை 2விருட்சம் இணையத்தின் படைப்புக்களோடு பல்வேறு படைப்பாளிகளி ன் படைப்புக்களும், நாளிதழ்களில் வெளிவந்த சிறப்பான சில தகவல் களையும் வெளியிட்டு சிறப்பித்து வருகிறது.

தற்போது

விதை2விருட்சம் இணையம், தற்போது அச்சு ஊடகத் துறையிலும் கால் பதித்துள்ள‍து. ஆம்! விதைவிருட்சம் என்ற பெயரில் அச்சு வடிவில் அரை யாண்டு இதழாக வெளிவருகிறது. கடந்த மார்ச் 2015-இல் சில தவிர்க்க‍ முடியாத காரணங்களினால் எளிய முறையில் விதைவிருட்சம் அச்சு வடிவ அரையாண்டு இதழ் வெளியானது.

இதன் அடுத்த‍ இதழ் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனை இன்னும் சிறப்புற மெருகூட்டும் பொருட்டு, தங்களது மேலான வாழ்த்துச் செய்தி, தங்களது சிறப்பான படைப்புக்களை (கவிதை, சிறுகதை, ஆன்மீகம், சமையல் குறிப்பு, மருத்துவம், சமூக விழிப்புணர்வு செய்தி, வாழ்வியல் வழிகாட்டுதல்கள், வெள்ளித்திரை தகவல்கள், நீங்கள் சார்ந்த துறையைப் பற்றிய அரிய தகவல்கள்) தகுந்த ஒளிப் படங்களை இணைத்து, MY ARTICLES / WISHES FOR VIDHAI VIRUTCHAM HALF YEARLY MAGAZINE என்று பொருளில் (SUBJECT) இல், குறிப்பிட்டு vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமா று கேட்டுக்கொள்கிறேன். உங்களது வாழ்த்துச் செய்தி, மற்றும் படைப்புக் கள்  விதைவிருட்சம் அரையாண்டு இதழில் பிரசுரமாகும். மேலும் உங்கள் படைப்பு விதை2விருட்சம் இணையத்திலும் பிரசுரமாகும் என்பதையும் அன்புகூர்ந்து தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதை – 24 வரிகளுக்குள் மிகாமல் இருக்க‍ வேண்டும்.

படைப்பு, தகவல்கள் பிற செய்திகள் – 50 வரிகளுக்குள்   மிகாமல் இருக்க‍ வேண்டும்.

உங்களது வாழ்த்துக்களையும், படைப்புக்களையும் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என்றென்றும் உங்களது நட்பினை விரும்பும்
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
கைப்பேசி எண்.9884193081

குறிப்பு

தாங்கள் அனுப்பும் படைப்புக்களை சுருக்க‍வோ அல்ல‍து திருத்த‍ம் செய்யவோ எங்களது ஆசிரியர் குழுவிற்கு முழுஉரிமை உண்டு.

தேர்ந்தெடுக்க‍ப்படும் படைப்புக்கள், விதைவிருட்சம் அச்சு வடிவ அரையாண்டு இதழிலும் , விதை2விருட்சம் இணையத்தில் வெளிவரும்.

இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களும் ஒரு சிறந்த எழுத்தாளர்களாக வலம் வர உங்களது பகிர்வு உதவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: