Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! – அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்!

பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! – அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்!

பாண்டவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டாயே கிருஷ்ணா! – அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்ணர்!

மகாபாரத போரில் கௌரவர்கள் தோல்வியுற்று, பாண்டவர்கள் வெற்றி கண்டு, தருமர் அஸ்தினா புரத்தின் அரியணை ஏறிய பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்

அவரது பக்தர்களில் ஒருவரால் கேள்வி கேட்கபட்டதாம். அந்த கேள்வி யை சற்றும் எதிர்பாராத ஸ்ரீ கிருஷ்ணர் அதிர்ச்சியில் உறைந்தாராம். பின் தன்னை சுதாரித்துக்கொண்டு, பதில் அளித்தா ராம். அவர் அளித்த கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍ து.

பக்தர்:

கிருஷ்ணா, நீ பாண்டவர்கள்மேல் அளவில்லா அன்பும் பாசமும்  கொண்டவன். மேலும் அவர் களது நலனில் மிகுந்த அக்கறை உள்ளவன் நீ. அதுமட்டும்மல்லாது, உன் தங்கை சுமித்ராவைக் கூட , பாண்வர்களில் ஒருவரான அர்சுனனுக்கு திருமணம் செய்துகொடுத்திருக் கிறாய். அப்படி இருக்க….பாண்டவர்கள் சூதாடி, நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா?

அதற்கு கிருஷ்ணர்:

சூதாடுவது என்பது அரச தர்மம். தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை. ஆனால் துரியோதனன் சூதாட அழைத்த போதே என் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று துரியோதனன் சொன்னான். ஆனால் தர்மனோ, தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான். தர்மன், என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம் என்றார்.

{{{{ கிருஷ்ணர் சொன்ன‍ பதிலில் உள்ள‍ நியாயம்புரிந்து, தான் சிறிதும் யோசிக்காமல் கேட்டுவிட்ட கேள்விக்கு கிருஷ்ணரிடம் மன்னிப்பும் கேட்டும் ஆசி பெற்றும் சென்றதாக ஒரு தகவல்.   }}}

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: