Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விரல் நகங்களை கடிப்பது என்பது ஒரு வித மனநோய்! – அவர்களும் மன நோயாளிகளே! – அதிர்ச்சித் தகவல்

விரல் நகங்களை கடிப்பது என்பது ஒரு வித மனநோய்! – அவர்களும் மன நோயாளிகளே! – அதிர்ச்சித் தகவல்

விரல் நகங்களை கடிப்பது என்பது ஒரு வித மனநோய்! – அவர்களும் மன நோயாளிகளே! – அதிர்ச்சித் தகவல்

பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் நம்மூரில் இருக்கிறது. அதை நாம் இங்கே சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால்,

அதுவும் மனநல பாதிப்பு தான் என்று அமெரிக்காவி ல் மனோதத்துவ நிபுணர்கள் கூறு கின்றனர். 

மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதைசேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர்.  உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண் டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழு வுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப் பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான். 

காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில்எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள்  கருத்து தெரி வித்துள்ளனர்.  எப்போதாவது நகம் கடிப்பவர்கள்கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. 

இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண் டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலி போர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவி யல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார். நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.

– தமிழ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: