Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான்! – இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் … – நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான்! – இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் … – நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான்! – இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் … – நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. சூரியனை, பூமி ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என கணக்கிடப் படுகின்றது. இதுபோன்று அது  பூமி தன்னைத் தானே

ஒரு தடவை சுற்றி முடிப்பது ஒரு நாளாகும். பூமியின் இந்த சுழற்சி அடிப்படையில்தான், ஆண்டு, நாள், நேரம் கணக் கிடப்படுகிறது. நேரம் என்பதை ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்று வைத்துள்ளனர். இந்த மணி கணக்கானது நிமிடம், வினாடி என்று பிரிக்கப்ப ட்டுள்ளது. 60 வினாடி நேரத்தை ஒரு நிமிஷம் என்றும், 60 நிமிடங்கள் என்பதை ஒரு மணி நேர மாகவும் கணித்து ள்ளனர். மொத்தம் 24 மணி நேரத்தில் பகல் 12 மணி நேரமாகவும், இரவு 12 மணி நேரமாகவும் உள்ளது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் என்பது 23 மணி நேரமாகத் தான் இருந்ததாம். கடந்த சில நூற்றாண் டுகளில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பூமிசுற்றும் வேகம் குறைந்து போனது. ஆண்டுக்காண்டு பூமி சுழற்சி வேகம் குறைந்ததால் வினாடிகள் நேரம் அதிகரித்து,  தற்போது ஒருநாள் என்பது 24 மணி நேர கணக்காகி விட்டது. இந்த ஒரு நாளில் அதாவது பூமி தன்னை த் தானே ஒருமுறை சுற்றிக் கொள்வத ற்கு 86 ஆயிரத்து 400 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது.  இந்நிலையில் சூரியனில் இருந்து மூன்றாவது கோளாக இருக்கும் பூமியி ன் வழக்கமான சுழற்சி வேகம் நேற்று (ஜூன் 30ஆம்திகதி செவ் வாய்கிழமை)மேலும் குறைந்துள்ளது. அதாவது பூமி தன் வழக்கமான வேகத்தை இழக்கிறது இதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள னர். பூமி சுழற்சி வேகம் குறைவதற்கான காரண த்தையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.  பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அலைகளால் புவி ஈர்ப்பு விசை அதிகரித்துள்ளது. இந்த புவி ஈர்ப்பு விசை அதிகரிப்பால் பூமி சுற்றும் வேகம் நாளை குறைகி றது. இதன் காரணமாக நாளை கால அளவு 1 வினாடி அதிகமாக இருக் கும். பொதுவாக ஒருநாள் முடியும்போது அதாவ து 24 மணிநேரம் முடியும்போது சர்வதேச ஒருங் கிணைப்பு திட்ட நேரம் (யு.டி.சி) 23:59:59: என்று காட்டும். அடுத்த வினாடி அது 00:00:00 என மறு நாள் கால நேர கணக்கைத் தொடங்கி விடும்.
ஆனால் இன்று அவ்வாறு இருக்காது. 24 மணி நேரம் முடிந்ததும் 23:59:59 என்பதற்கு பதில் 23:59:60 என்று மாறிவிடும். இதன் மூலம் இன்று 1 வினாடி அதிகரித்து விடும். இந்த 1 வினாடி நேரத்தை குறைத்து சரி செய்ய ப்போவதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அறிவி த்துள்ளது. பூமியின் சுழற்சி வேகம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை நாசா விஞ்ஞானி கள் உறுதி செய்துள்ளனர். 
=>சுந்தர்

Leave a Reply

%d bloggers like this: