Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! – அவசியமான தகவல்

நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! – அவசியமான தகவல்

நீங்கள் தரும் காசோலை (செக்) எந்தெந்த காரணங்களால் Bounce ஆகிறது! – அவசியமான தகவல்

இன்றைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் இன்னொருவருக்கு காசோலை யில் ஒரு தொகையை குறிப்பிட்டு தருகின்றீர்கள். அவரும் அவரது இருப்புக்கணக்கு வைத்திருக்கும் வங்கயில் நீங்கள் கொடுத்த‍

காசோலையை டெபாசிட் செய்கிறார். ஆனால் இரண்டொரு நாட்களில் அக்காசோலையை வங்கி ஏதோ ஒருகாரண த்தினால்  செல்லாது என்று அறிவித்து, டெபாசிட் செய்தவருக்கே திருப்பி அனுப்பி விடுகிறது. மேலும் டெபாசிட் செய்வரிடம் இருந்து அபராதமாக ஒரு குறிப்பிட்ட‍ தொகையை வசூலித்து விடுகிறது.

இது சாதாரண நிகழ்வாக கருதமுடியாது. காரணம், நீங்கள் யாருக்கு செக் கொடுத்தீர்களோ, அவர் உங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க‍ முடியும். வழக்கின்முடிவில் உங்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க‍ப்பட வாய்ப்பு உண்டு.

அதனால் அத்தகை நிலைக்குத் தள்ள‍ப்படாமல் இருக்க‍ நாம் எப்போதும் முன்னெச்ச‍ரிக்கையு டன் காசோலையை கையாளவேண்டும். மேலும் இந்த காசோலை எந்தெந்த காரணங்களால் செல்லாது என்று வங்கி அறிவிக்கும் என்பதையும் தெரி ந்து கொள்வது மிகவும் அவசியம்.

காசோலை பவுன்ஸ் ஆவதற்கான காரணங்கள்

1) காசோலை பல காரணங்களால் செல்லாமலாகி விடும்.

2) உங்கள் வங்கி இருப்பில் போதுமான தொகை கணக் கில் இல்லாமல் போனால் நீங்கள் கொடுத்த‍ காசோ லை செல்லாது

3) கையொப்பங்களின் வேறுபாடுகள் இருந்தாலும்  நீங்கள் கொடுத்த‍ காசோலை செல்லாது

4) பழைய தேதியிட்ட காசோலைகள் கொடுத்திருந் தாலும்  உங்கள் காசோலை செல்லாது

5) காலாவதியான அல்ல‍து உயிரிழந்த (State), காசோலைகள் கொடுத்திருந்தாலும்  காசோலை செல்லாது

6)முன்தேதியிட்ட‍காசோலை(Post Dated Cheques)யை வங்கியில்  டெபாசிட் செய்தாலும் அந்த காசோலையை செல்லாததாகும்.

7) காசோலைகளில் செய்ய‍ப்படும் திருத்த‍ங்களுக்கு தாங்கள்  பொறுப்பு ஏற்காமல் இருந்தாலும்  நீங்கள் கொடுத்த‍ காசோலை செல்லாது

– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: