Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

5 மணிநேரத்தில் நீங்க ஒரு அழகு தேவதையாக ஜொலிப்பீங்க‌! – இது அழகிற்கான‌ ஆரோக்கியம்

5 மணிநேரத்தில் நீங்க ஒரு அழகு தேவதையாக ஜொலிப்பீங்க‌! – இது அழகிற்கான‌ ஆரோக்கியம்

5 மணிநேரத்தில் நீங்க ஒரு அழகு தேவதையாக ஜொலிப்பீங்க‌! – இது அழகிற்கான‌ ஆரோக்கியம்

தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிற அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சையே

ஸ்பா! உலகம் முழுக்க பிரபலமான ஸ்பா சிகிச்சைக்கு, சமீப காலமாக இந்தியாவில், குறிப்பாக சென்னையில் செம மவுசு! கல்யாணம் மாதிரி வீட்ல ஏதோ பெரிய விசேஷம்னு வச்சுப்போம். மாசக்கணக்குல ஓடியாடி வேலை பார்க்க வேண்டியிருக்கும்.  ஷாப்பிங், அலைச்சல்னு எல்லாம் முடிஞ்சதும், மனசுக்கும் உடம்புக்கும் ரெஸ்ட் தேடி எங்கயாவது போக மாட்டோமானு நினைப்போம்.

உடம்புல உள்ள களைப்பை நீக்கி, மனசையும் புத்துணர்வாக்கற மேஜிக்தான் ஸ்பா. ‘‘ஃபேஷியல்ல தொடங்கி, தலைக்கான மசாஜ், கை, கால்களுக்கான மசாஜ், உடம்புக்கான மசாஜ், முதுகுக்கான மசாஜ்னு ஸ்பால நிறைய வகைகள் இருக்கு. சாதாரண ஃபேஷியல், மசாஜுக்கும், ஸ்பா-வுக்கும் அப்படி என்னதான் வித்தியாசம் தெரியுமா. ஸ்பாவுக்காக உபயோகிக்கிற பொருள்கள் எல்லாமே இயற்கையான முறையில தயாரி க்கப்படுது.  கெமிக்கல் கிடையாது. ஸ்பாவில் ஒவ் வொருநபருக்கும், ஒவ்வொரு சிகிச்சைக்கும் ஏத்தபடி பிரத்யேககிரீம், எண்ணெய், பேக்னு எல்லாம் உண்டு. உடம்பு வலியைப் போக்கற ஸ்பெஷல் சிகிச்சைகளு ம் ஸ்பால இருக்கு!’’ இன்னொருத்தர்கிட்ட உடம்பைக் கொடுக்கறது?’ எனக் கூச்சப்படுகிறவர்களுக்கு அந்த சங்கோஜத்தையும் சங்கடத்தையும் போக்குகிறது ஸ்பா.  

இதில் இரண்டு விதமான மசாஜ் உண்டு. உடையோடு செய்யக் கூடிய தாய் மசாஜ். டைட்டான உடம்பைத்தளர்த்தி, இழுத்து, மடக்கி ச் செய்கிற இந்த மசாஜுக்கு பிறகு சில கிலோ எடை குறைந்த மாதிரி உணரலாம். உடலிலுள்ள கழிவுநீர் மொத்தமும் வெளியேறி, உடல் லேசாகும். குறைந்த உடைகளுடன் செய்யப்படுகிற மற்ற மசாஜ் வகையறாக் களிலும், உடம்பைப் பற்றிய கூச்சம் இல்லாமல் செய்வது தான் ஸ்பாவின் சிறப்பே! ‘‘தலை முதல் கால் வரையிலா ன ஸ்பாவுக்கு 5 மணி நேரம் வேணும்.  அவ்ளோநேரம் செலவிட முடியாதவங்க, கால்களுக்கான ஃபுட் ஸ்பா மட்டும் எடுத்துக்கிட்டாலே போதும். உடம்போட அத்தனை நரம்பு முனை களும் முடியற இடம் கால்கள். அதனால கால்களுக்குச் செய்யற ஸ்பா, ஒட்டுமொத்த உடம்பையும் ரிலாக்ஸ் செய்யும்.

மணப்பெண்களுக்கான பிரைடல் ஸ்பா ரொம்பவே ஸ்பெஷல்! ‘‘எல்லா வேலைகளும் முடிஞ்சு, கல்யாணத் துக்கு ரெண்டுநாள் முன்னாடி வந்தாங்கன்னா போதும்.  தலைலேருந்து, கால் வரைக்குமான ஸ்பா செய்த பிறகு, சந்தனம், மஞ்சள், அரிசி, ரோஜா, ஜாஸ்மின் ஆயில் எல்லாம் கலந்த பேக் போட்டு, ரோஜாவும் பாலும் கலந்த தண்ணீர்ல ஊறி, ஒரு குளியலும் போட்டாங்கன்னா, தேவதை மாதிரி ஆயிடுவாங்க.

=> அழகன் மா. தேவி

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: