Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு?

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு?

அன்புடன் அந்தரங்கம் (12-07-2015) – போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு?

அன்புள்ள அம்மா,

என் வயது, 26; கணவரின் வயது31. எங்களுக்கு திருமணம் ஆகி, இரண்ட ரை ஆண்டுகள் ஆகிறது. நான்கு மாத பெண் குழந்தை உண்டு. மாமியார், மாமனார் எங்களுடன் தான் உள்ளனர். என் கணவரின் தம்பியும்,

அவர் மனைவியும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். கொழுந்தனாரின் மனைவி எல்லாரிடமும் சண்டை போடுவாள்; இருப்பினும், அவளைத் தான் என் மாமியாரும், மாமனாரும் போற்றுவர்.

எங்களிடம் அவள் பேசமாட்டாள்; என் குழந்தையை கூட தொடமாட்டாள். ஆனால், நாங்கள் அவள், 3 வயது பெண் குழந்தையுடன் விளையாடுவோம். எல்லாவற் றிலும் அவளுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் என நினைப்பாள்.

அவர்கள் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திரும ணம் செய்துகொண்டனர். எங்கள் திருமணம், பெரிய வர்கள் பார்த்து செய்தது. என் கணவர்தான் வீட்டு கடன் கட்டுகிறார். என் வளைகாப்பு, பிரசவ செலவுகளை என் கணவர் தான் பார்த்தார். எனக்கு அம்மா இல்லை; அப்பாவுக்கும் நிரந்தர வருமானமில்லை. என் அண்ணனோ, சொத்துக்காக எங்கள்தாய் மாமா விடம் சேர்ந்துகொ ண்டு, எங்களுடன் பேசுவதி ல்லை. அத்துடன், என் வளைகாப்பு மற்றும் பிரசவம் என்று எதற்கும் அவன் வரவில்லை.

என் அம்மாவுக்கு வரும் சொத்தில் இருந்து எடுத்துக் கொள்வதாக கூறி, என் கல்யாண செலவு, படிப்பு என, எல்லாவற்றிற்கும் சின்ன மாமா தான் செலவு செய்தார். ஆனால், அம்மா வழி சொத்துக்கு பெரியம்மா ரெண்டு பேரும், மாமா இருவரும், நாங்களும் வழக்கு தொடுத்துள்ளோம்.

என் பெரிய மாமா, மூன்று பங்கு போட்டு அதில், ஒரு பங்கு பெண்களுக்கும், 2 பங்கு, இரண்டு மாமாவும் வைத்துக்கொள்ளலாம் என்றுகூறுகிறார். ஏனெனில், மூன்று பெண்களுக்கு சீர் செய்ய தனியா க, 40 சென்ட் நிலத்தை எங்கள் தாத்தா, சின்னமாமாவுக்கு கொடுக் க, அவரே அதை வைத்துக் கொண்டார்.

தற்போது, சின்ன மாமா, எங்களுக்கு செலவு செய்த பணத்தை எங்களிடம் கேட்கிறார். நானும், அப்பாவும், அப்பா வழி சொத்தை விற்று தருவதாக கூறுகிறோம். ஆனால், அப்பா வழிசொத்து எதை யும் தர மாட்டேன் என, கையெழுத்து போட மறுக் கிறான் என் அண்ணன்.

என் கணவர் வீட்டிலும், நாங்கள் குடியிருக்கும் வீட்டைத்தவிர வேறு சொத்து இல்லை. இந்த சொத்து பிரச்னையால், நான், மாமாக்கள் இருவரிடமும் பேசுவதில்லை. பெரியம்மாக்கள் கூட மட்டும் தான் பேசுகிறேன். அவர்களும் சின்ன மாமாவுக்கு தான் ஆதரவாக பேசுகின்றனர்.

சின்ன மாமா ரொம்ப கண்டிப்பானவர்; அதேசமயம், என்னையும், என்அப்பாவையும் ஏளனமாகபேசுவார் . பணம், படிப்பு என்று எங்களுக்கு கீழ் உள்ள மாப்பி ள்ளையாக பார்த்துத்தான், 20 பவுன்போட்டு என்னை திருமணம் செய்து கொடுத்தனர்.

நான் பி.எஸ்சி., முடித்து வேலைக்கு சென்றேன். அந்த பணத்தில் தான், எம்.பி.ஏ., படித்தது மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் இருசக்கரவாகனம் எல்லாம் வாங்கினேன்.

இதையெல்லாம் என் கணவரிடம் சொல்லித் தான் திருமணத்திற்கு சம்ம தித்தேன். ஆனால், என் கணவரோ இதெல்லாம் தெரிந்ததிலிருந்து இப்போதுவரை என்கூட சண்டை போடுவதுடன், அடிக்கடி மட்டம் தட்டுகி றார். அவர் செய்த செலவுகளை எல்லாம் சொல் லிக் காட்டுவதுடன், என்னை கல்யாணம் செய்து கொண்டது தப்பு என்று அடிக்கடி சொல்கிறார்.

அவர் அம்மா முன்னாடியே என்னிடம் சண்டை போடுவார். ‘நமக்குள் நடக் கும் சண்டை நாலு சுவர்களுக்குள்இருக்கட்டும்.’ என்றுசொன்னால், கேட் க மாட்டார். ஆடம்பரமாக இருக்கணும் என்று நினைப்பார். செலவுகளை குறைத்து சேமிக்கலாம் என்று சொன்னால், ‘ இதை உங்க வீட்டில் போய் சொல்…’ என்று திட்டுவார்.

அவர் அம்மாவும், அவருக்குத் தான் ஆதரவாக பேசி, என்னை திட்டுவார். அவங்க சொந்தகாரங்க முன் என்னை அவமானப்படுத்துவார். ஆனால், என் சொந்தகாரங்க முன் நல்லவர் மாதிரியும், என்னை நன்றாக பார்த்துக் கொள்வது மாதிரியும் நடிப்பார். நானும், அவரிடம் தனியாக இருக்கும் போது, சண்டைபோடுவேன். அப்போது மட்டும் என்னிடம் மன்னிப்பு கேட்பார். பின், மறுபடியும் சண்டை போடுவார். கல்யாணத்து க்குப் பின், நானும் வேலைக்கு சென்றே ன்.

கல்யாண கடனை எல்லாம் அடைத்த பின்தா ன் குழந்தையே பெற்றுக் கொண்டோம். நான் வேலைக்கு போனாலும், என்சம்பளத்தை அவரிடமே கொடுத்துவிடுவே ன். ஆனால், அவர் அப்படி இல்லை. இருவரும் சேர்ந்து வரவு – செலவு பார்க்கலாம் என்று சொன்னால் கேட்கமாட்டார். இப்போது காரும் வாங்கி விட்டார். கார் லோனும் கட்டணும். இப்போது எனக்கு பிரச்னை என்ன வென்றால், குழந்தை பிறந்தும்கூட என்னிடம் சண்டை போடுவது தான்.

என்னுடைய வலி, வேதனை எல்லாம் அவருக்கு புரியவில்லை. அவருக்காக தோன்றினால் தான் குழந்தையை கொஞ்சுவார். குழந்தையை குளிப் பாட்டுவதில் இருந்து எல்லாம் நான்தான் பார்த்து க் கொள்கிறேன். அதனா ல், தனிக்குடித்தனம் செல்லலாம் என்று சொன் னால், என் கணவருக்கு இதில் உடன்பாடு இல்லை. இவர்களை திருத்த நான் என்ன செய்ய வேண் டும். எனக்கு ஒரு நல்ல முடிவை கூறுங்கள்.

— இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு,

புகுந்தவீட்டில், உன்னைவிட உன்கொழுந்தன் மனைவிக்கு மரியாதை அதிகம் என எழுதியிருந்தாய். சில பெண்கள் புகுந்த வீட்டிற்குள் பிரவேசி க்கும் போது கூனிகுறுகி அடிமை உடல் மொழியுடன் பிரவேசிப்பர். அவர் கள் ஆயுளுக்கும் புகுந்தவீட்டில் அடிமைதான். சில பெண்கள் புகுந்த வீட்டிற்குள் இந்திரா, ஜெய லலிதா தோரணையில் பிரவேசிப்பர். ஆயுளுக் கும் அவர்கள் ராஜ்ஜியம்தான் கொடி கட்டி பறக்கும். தவறான வழியில் செல்லும் பெண்க ளுக்கும் முகராசி தேவை என, ஒரு கிராமத்து சொலவடை உண்டு. புகுந்த வீட்டிற்குள் செல்லு ம் மருமகளுக்கும் மதிக்கப்பட ஒரு முகராசி தேவை.

கோவணத் துணி போல் கொஞ்சூண்டு இடம் இருந்தாலும், அதில் பங்கு கேட்டு, 10 பேர் சண்டையிடுவர். இது, எல்லா குடும்பங்களிலும் நடப்பது தான். அதேபோன்று, மனைவி வீட்டில் நடக்கும் கூச்சல், குழப்பங்களை எந்த கணவனும் சொல்லிக் காட்டவே செய்வான். இதை எல்லாம் பெரிதுபடுத்தாதே!

உன் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க தனிக்குடித்த னம் போவதே சிறந்த வழி என்று கருதுகிறாய். தனிக் குடித்தனத்தில் உன் பொறுப்புகள் அதிகமாகும். தன் சொந்த பந்தங்களிடம் உன்னைப் பற்றி எப்போதும் குறை பேசும் உன் கணவன், தனிக்குடித்தனத் திற்கு பின், அதிகம் குறை பேசுவான். திருமண பந்தம் மீறிய உறவுகளுக்கு முயற்சிப்பான். கார் லோன் வாங்கி ஈ.எம்.ஐ. ,யை உன் மீது சுமத்திய உன் கணவன், மேலும் ஆடம்பர வாழ்வு வாழ கடன் வாங்கி, உன் தலை மீது சுமத்துவான். மொத்தத்தில் உன் கணவனின் அட்டூழியங் கள் அதிகரிக்கும்.

உன் குடும்பத்து சொத்து வழக்குகள் நீதிமன்ற த்தில் நடந்து தீர்ப்பு வரட்டும்; அதுவரை காத் திருக்கலாம் அல்லது நீதிமன்றத்திற்கு வெளி யே சமரசம் செய்ய முடிந்தால் சமரசம்செய்துகொள்ளுங்கள். இதனால், பிரச்சனைக்கு உடனடி நிரந்தரதீர்வு கிடைக்கும். உறவுகளுக்கிடையே புதைந்த பகை விலகி, அன்பு மலரும். சமரசத்தில் லாபம் அடைவது உன் பெரி யம்மாக்களும், தாய் மாமன்களும் தானே!

உன் படிப்பை, கல்யாண செலவை கவனித்துக் கொ ண்ட மாமாவுக்கு கொஞ்சம் விட்டுக் கொடுப்பதில், என்ன கெட்டுப் போய் விடும்?

நீ யாரையும் மாற்ற முயற்சிக்காதே. உன்னிடம் ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை திருத்திக் கொள்.

கொசுக்கு பயந்து, கோட்டையை விட்டு யாரும் போவரா.. பிரச்னைகளுக்கு பயந்து நீயும், உன் குழந்தையும் தனியே சென்று பிழைத்துக் கொ ள்கிறோம் என்பது மகா அபத்தம். கணவன் என்பவன் வாழ்க்கைக்கு அவசிய மான சாத்தான். அச்சாத்தானிடம் பேசிப் பேசி, தனக்கேற்றவாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

உனக்கு சகிப்பு தன்மையும், பொறுமையும் தேவை. சுயபச்சாதாபம் தவிர்த்தல் நலம். தனிக்குடித்தனம் யோசனையை 3 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடு. அப்போதும் புகுந்த வீட்டுச்சூழல் மாறாவிட்டால், தனிக்குடித் தனம் பற்றி யோசி. கணவனின் மீதான ஆவலாதிகள் தீர, கணவனிடம் மனம் விட்டு பேசு. புகுந்த வீட்டு சொந்த பந்தங்களுடன் தகவல் தொட ர்பை புதுப்பிக்க பார்.

எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு நம்மிடமே உள்ளது. நாம் தான் மதி யூகத் துடன் செயல்பட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு? எதிரி என்ன ஆயுதம் வைத்திருக்கிறானோ, அதே ஆயுதத்தை எடுத்து நாமும் போரிட வேண்டும்.

தொடர் முயற்சிகள் உனக்கு வெற்றியைப் பரிசளிக்கும்.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: