Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாட்ஸ் அப், ஸ்நாப் சாட்-க்கு நிரந்தர தடை!

வாட்ஸ் அப், ஸ்நாப் சாட்-க்கு நிரந்தர தடை!

வாட்ஸ் அப், ஸ்நாப் சாட்-க்கு நிரந்தர தடை!

முகநூல், டிவிட்ட‍ர், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களை பின்னுக்கு தள்ளி தற்போது உலகமக்க‍ள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளமா

இயங்கி வரும் வாட்ஸ் அப்-க்கு விரைவில் தடை விதிக்க‍ இங்கிலாந்தில் அரசு முடிவெடுத்துள்ள‍தாக செய்திகள் வந்துள்ள‍ன•

மறைமுக குறியீடுகள் கொண்ட எந்த வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்பவும் தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம ரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார் க்கப்ப டுகிறது.

இங்கிலாந்தில் அண்மையில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்த லையடுத்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பயங்கரவாதம் பரவாமல் இருப்பதற்காக கடுமையா ன சட்டங்களை இயற்ற உள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளே பயங்கரவா திகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாகவும், எனவே இங்கிலாந்து புலனாய்வுத்துறை ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஆப் பிள் நிறுவனத்தின் ஐ மெசேஜ், வாட்ஸ்-ஆப் போன் றவைகளுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற் கிடையே மக்களின் தனிபட்ட உரிமையை பாதிப்ப தாக இங்கிலாந்தில் இந்த புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

=> தினத்தந்தி

0 Comments

Leave a Reply