சிகரெட் பிடிக்காதவர்களுக்கு பக்கவாதநோய் தாக்கும் அபாயம்! அதிர்ச்சித் தகவல் (முழுசா படியுங்க…)
சிகரெட் பிடிக்காதவர்களுக்கு பக்கவாதநோய் தாக்கும் அபாயம்! அதிர்ச்சித் தகவல் (முழுசா படியுங்க…)
பொதுவாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு பலவிதமான நோய்கள் தாக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு சிகரெட் பிடிக்காதவர்க ளுக்கு பக்கவாதநோய் தாக்கும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தான் இந்த அதிர்ச்சிக்குரிய
முடிவுவெளியாகியுள்ளது. அதாவது சிகரெட் பிடிப்பவர்களுக்கு அருகில் சிகரெட் பிடிக்கா தவர்கள் இருந்தால், சிகரெட் பிடிப்பவர்கள் பிடித்து வெளியே விடும் புகையை அந்த சிக ரெட் பிடிக்காதவர் சுவாசித்தால், அவருக்கு கண்டிப்பாக பக்க வாதம் உள்ளிட்ட சிலபல நோய்கள் தாக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
புகை பிடிப்பதினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.
காச நோய்
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்
இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய்
புற்று நோய்
ஆண்மை குறைவிற்கான சாத்தியக் கூறுகள் .
இந்நிலையில் புகைப்பழக்கம் இல்லாத அதே சமயம் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென்கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 22 ஆயிரம் பேரிடம் பக்கவாதம் தொடர் பாக ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் சிகரெட் புகையை சுவாசித்தவர்கள். பக்க வாதத்தை ஏற்படுத்தும் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவற்றை கழித்துவிட்டு பார்க்கும்போது புகை பழக்கம் இல்லாத அதேசமயம் சிகரெட் புகையை சுவாசி ப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள்கூட, அருகில் உள்ளவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசிப்ப தால், மிகமோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களைத்தான் ‘பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ என்கிறார்கள். 1980–90-களில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடு களில், புகை பிடிக்காத பலரும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கி இறந்தனர். பிறகுதான் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அத்தனைபேரின் வீட்டிலு
ம் சிகரெட் புகைப்பவர் (Active Smoker Main) ஒருவர் இருந்திருக்கிறார். இந்த அதிர்ச்சிக் கண்டுபிடிப்புக்குப்பிறகு, 2006 -ல், ‘பேஸிவ் ஸ்மோக்கிங்’ உண் டாக்கும் ஆபத்துக்கள் அனைத்தும் அறிய ப்பட்டன.
வீட்டில் அல்லது பொது இடங்களில் ஒருவர் சிகரெட் புகைத்தால், அதிலி ருந்து வெளியாகும் 4000 ரசாயனப் பொருட்களை, சுற்றிலும் இருக்கும் ‘ பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ சுவாசிக்கநேர்கிறது. அ வற்றுள் 69 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டா க்கக்கூடியவை. ஒருவர் புகை பிடிக்கும்போது, அவர் உள்ளே இழுக்கும் புகையைவிட (stream smoke), வெளியேவிடும்புகை (Side stream smoke ) அதிகம். இரண்டு புகையிலுமே, நிகோட்டின், காட்டினின், தையோசயனைட்ஸ், பென்சீன் கூட்டுப்பொருட்கள் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்கள் உள்ளன. ஒரேவீட்டில் வசிக்
கும், புகை பிடிப்பவருக்கும், புகை பிடிக்கா தவருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல் லை.
இதையடுத்து காற்று மாசு, சுற்றுச்சூழல் மாறுபாடுகள் போன்றவைகளுக்கும் பாக்க வாதத்திற்கும் இடையேவுள்ளதொடர்புகள் பற்றி வருங்காலத்தில் ஆய்வு நடத்தவேண்டியது அவசியம் என ஆய்வாளர்கள் கூறியுள்ள னர்.
=> வி. கலா