Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் – எவரும‌றியா அரியதொரு தகவல்

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் – எவரும‌றியா அரியதொரு தகவல்

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் – எவரும‌றியா அரியதொரு தகவல்

மகாபாரத‌த்தில் பாணவர்களின் வனவாசமும், அஞ்ஞான வாசமும் முடிந்த பிறகு, பாண்டவர்கள் சார்பில் தூதுவந்த கிருஷ்ணன், “துரியோத னா நீ பாண்டவர்களிடம்

சூதில் அபகரித்த நாட்டை திருப்பி அவர்களி டம் ஒப்ப‍டைத்துவிடு என்று சொன்னார். அதற்கு துரியோதனன் மறுத்தான். அதன்பிறகு கிருஷ்ணர், போரை தவிர்க்கும் பொருட்டு, பாண்டவர்களுக்கு ஐந்து ஊர்களையாவது கொடு என்றார். அதற்கும் துரியோதனன் மறுத் தான். இதனை கேட்ட கிருஷ்ணர், சரி ஐந்து வீடுகளையாவது பாண்டவர்களுக்கு கொடு என்று கேட்டும், அதற்கும் துரியோதனன் மறுத்து, பாண்டவர்களை போரில் வெல்வதாக கூறினான்.

பாண்டவர்களுக்கு 5 வீடுகளைக்கூட தரமறுத்த‍ துரியோதனன், பாண்டவ ர்களின் முதல்வனான தருமருக்கு தருமமாக தனது நாட்டை தருவதாக சொல்லியுள்ள‍து ஆச்ச‍ரியமளிக்கும் விஷயமாக இருக்கிறதல்ல‍வா? இதோ அந்த காட்சி

மாகாபாரதத்தில் இடம்பெற்ற‍ இறுதிக்கட்ட‍ போரின் முடிவில் துரியோ தனன், தனது படைகள் அழிய, தளபதிகள், உடன் பிறந்தோர் என பலரை இழந்தான். அதுமட்டுமா, பீஷ்மர், துரோணாச்சாரியார் மற்றும் கிருபாச் சாரி யார் போன்றவர்களையும் இழந்தான். தனிமை அவனை உருக்குலை ந்தவனாக, போர்க்களத்தையே உற்று நோக்கினான். தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான். ஒரு கதையை எடுத்துக்கொண்டு நட ந்தான். தன்னைக்காண வந்த சஞ்சயனிடம் ‘நான் ஒரு மடுவில் இருப்ப தாகக் கூறிவிடு’ என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர். அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.

Duryodhana Gada for skit

அவன் இருக்குமிடம் வந்த தருமர் ‘துரியோதனா .. சத்ரிய னான நீ போர்க்களத்தைவிட்டு ஒடிவந்து பதுங்கிக் கொண் டாயே..அதுவா வீரம்.. எழுந்து வெளியே வந்து போர் செய்’ என்றார்.அதற்கு துரியோதனன்.. ‘தருமரே..

நான் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய் வேன். எனக்குரிய நாட்டை தருமமாகத்தருகிறேன். பெற்று க்கொள்’ என்றான்.

நடுவே புகுந்த பீமன், ‘வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா ‘ என்றான்.வேறுவழியின்றி துரியோதனனு ம் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகு தியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதா யுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டுதிக்கும் எதிரொலித்தது. போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.

அப்போது கண்னன், யுத்தநெறிக்கு மாறாக ப்போர் செய்தால்தான் அவனை வீழ்த்த முடி யும் என்பதை உணர்ந்து.. அவன் தொடையை ப் பிளக்க வேண்டும்.. என அர்ச்சுனனிடம் குறிப்பால் தெரிவிக்க.. அர்ச்சுனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையைத் தட்டிக்காட் டினான். குறிப்பறிந்த பீமன்.. தனது கதாயுதத்தால் துரியோதனனின் இரு தொடைகளையும் முறித்தான்.நிற்கவும் இயலாது துரியோதனன் கீழே வீழ்ந்தான்.

=> டி.வி. ராதாகிருஷ்ணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: