Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு

உங்களது உள்ளங்கையில் கரும்புள்ளி இருக்கிறதா? அதனால் என்னென்ன பலன்கள் ஏற்படும் – ஜோதிட ஆய்வு

வாழ்க்கையில் நாம்  நம்மை அறியாமல் சில சமயம் கெடு செயலில் ஈடுபட்டால், இயற்கை கரும்புள்ளி மூலமாக எச்சரிக்கும். அது முடிவல்ல. சோதனைக்கு

உட்படுத்துவதுதான். ஜாதகத்தில் 10ல் சனி, பனிரண்டில் புதன் நீசமானால், கிரகநாதர்கள் , கிரகநாதர்களுக்கு உரிய தீமைகளை உணர்த் தவே கரும்புள்ளி என திடமாக நம்பலாம். சிலர்தான் பிறந்தது முதலே இந்த கரும்புள்ளி இருக்கிறது என்பர். அதாவது அது அதன் வேலையை செய்யக் காத்திருக்கிறது என்று அர்த்தம்.  இனி இந்த கரும்புள்ளி பிரச்சனைகளை உதாரணங்களுடன்  விரிவாகக் காணலாம்.

1. உதாரணமாக சுண்டு விரலில் மூன்றாம் அங்குலாஸ்தி யில் ( விரலின் அடிப்பகுதி ) கரும்புள்ளி தென்பட்டால், ஒரு விலைமதிப்பற்ற பொருள் திருட்டுப் போகப்போகிறது என்று அர்த்தம். மற்றும் உத்தியோக உயர்வு பாதிக்கப்படும். கைபேசி, மடிகணிணி( லேப்டாப்)  இவை காணாமல் போகும். பாத்ரூமில் கழட்டி வைத்தமோதிரம் அபேசாகும்.  அலுவலகத்தில் நம் கட்டுப்பாட்டில்இருந்த ஃபைல் காணாமல்போகும் . வேண்டாதவர்கள் யாராவது ஃபைலை இடம் மாற்றி வைத்து திண்டாட விடலாம். இதனால் பதவி பறி போனவர்களும் உண்டு. இந்த சமயம் ஜாதகத்தில் பத்தில் சனி, பனிரண்டில் புதன் நீசமாகும்.

2. ஜாதகத்தில் சந்திரனுக்கு 7-ல் அல்லது லக்கின த்திற்கு 7-ல் சனியுடன் சுக்கிரன் இருக்கப்பெற்றா ல், சுக்கிர மேட்டில் கரும்புள்ளி தெரியவரும். இதன்பொருள்  வாழ்க்கைத்துணை நம்மை விட்டு ப் பிரிந்து அதனால், நீண்ட நாள் மனக்கவலை வரப்போவதின் அறிகுறிதான். சுக்கிரமேடு என்ப து கட்டைவிரலை ஒட்டியே அமையப்பெற்ற மேடுதான். சுக்கிரனை வணங்கவேண்டும். வெள்ளி யன்று சனி, ராகு ஹோரையில் தண்ணீர் பருக வேண்டாம்.

3. ஒரு பெண்ணின் இடது காதில் எங்கு கரும்புள்ளி காணப்பட்டாலும், , அதன் பலன் புதுபுது தங்க நகைகளை அணிந்து ,சமுதாயத்தில் அந்தஸ்த்தில் வாழப்போவதின் அறிகுறிதான்.

4. மேற்குறிப்பிட்ட அறிகுறி ஒரு ஆணுக்கு ஏற்பட்டால், அதாவது ஆண்களின் இடதுகாதில் கரும்புள்ளி அமைய ப் பெற்று சுக்கிரன் 9-ல் இருந்தால், இவர்களுடைய தாய் தந்தையரே அதிகமான செல்வத்தைத் தருவார்கள்.  கெட்ட கிரகங்களின் பார்வை இருந்தால், வயதில் முதிர்ந்த பெண்ணோ, இனம், மதம்மாறியோ திருமணம் செய்ய மனம் தூண்டும். இதற்கு பரிகாரம் சிறு வெள்ளிப் பெட்டகத்தில் தேனை ஊற்றி வாசலில் பள்ளம் ஏற்படுத் தி அதில் வெள்ளிப் பெட்டியை வைத்து மண்ணால் மூடிவிட்டால், நன்மைகள் நம்மை நாடிவரும்.

5. ஒரு பெண்ணின் மூக்கின் நுனியில் கரும்புள்ளி தென்பட்டால், தன் தகுதிக்கு மேற்பட்ட ஒரு வரன் அமையப் பெற்று ஆடம்பர வாழ்வு வாழப் போவதின் அறிகுறிதான்.

6. ஆயுள் ரேகையில் கரும்புள்ளி தேன்புள்ளி தோன்றினால், அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்த பின் மிகமிக யோகம் எனலாம்.

7.கட்டைவிரல்நுனியில் கரும்புள்ளி தோன்றினால் , தினக்கூலியாக இருந்தே பணம் சம்பாதித்து பெரு வாழ்வு வாழலாம். சுண்டுவிரல் முதல்( பிரிவில்) அங்குலாஸ்த்தியில் கரும்புள்ளி என்றால், குழந்தைகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

8. உள்ளங்கையின் நடுப்பகுதியில் கரும்புள்ளி தோன்றினால், பிறந்தஇடத்தை, ஊரை, கிராமத் தை, ஜென்மபூமியை விட்டுவிட்டு தன்னை உயர்த்திக்கொள்ள புது இடம் பெயரப்போவதின் அறிகுறி. கெடுதலற்ற நன்மை.

9. கட்டை விரலை ஒட்டி அமையப்பெற்ற சுக்கிரமேட்டில் கட்டைவிரலை ஒட்டினாற்போல் கரும்புள்ளி இருந்தால், வில்லங்கம் நிறைந்த வாழ்க் கை. சொந்த ஜாதகத்தில் 10-ல் சனி, செவ்வாய் இருந்தால், வீண்வாக்கு வாதம்கூடாது. வேலைக்கே வேட்டு வைத்துவிடும்.

10. இருதய ரேகையை ஒட்டியே தெளிவான கரும் புள்ளி என்றால், ஷேர்மார்க்கெட், லேவாதேவி, கந்துவட்டி, மீட்டர்வட்டி கூடாது. பெரிய பொருளா தார சரிவை சந்திக்க நேரும்.

11. லக்னத்திற்கு 4-ல் ராகு இருந்தால், மரமேறி வாழ்க்கை புரிவோர் உஷார் நிலையில் செயல்பட வேண்டும்.  புத்தி ரேகையை ஒட்டியே கரும்புள்ளி தென்பட்டால், ஹெல் மெட் அணியாமல் பிரயாணம் கூடாது. பளுவான வேலைகளில் ஈடுபடும் போது , காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

12. சந்திர மேட்டில் அதன் ஓரமான பகுதியில், கறுப்பு நிறபுள்ளி திடமாகக்காணப்பட்டால், இரைப்பை, பெருங் குடல் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படப்போவதின் அறிகுறி தான். உயர்ஜாதி முத்தை வெள்ளியில் மோதிரமாக அணிவது நல்லது.

13. சுக்கிர மேட்டில் இருந்து ஒரு ரேகை உதயமாகி இருதய ரேகையோடு இணைந்தால், திருமணம் சட்ட ரீதியாக பிரிவினை ஏற்படப்போவதின் அறிகுறிதான்.

14. மோதிர விரலின் இறுதி அங்குலாஸ்தியில் ( அடிப் பகுதி) அந்நிய நாட்டில் பிற மாநிலத்தில் வழிப்பறி கொடுக்கப் போவதின் அறிகுறிதான். மிதுன ராசியினரின் கையில் இந்த அமைப்பு தென்பட்டால், நூறு 100%ம் நடந்துவிடும் என எண்ணல் வேண்டும். புதன்கிழமை, புதன் ஹோரையில் புதனை மானசீகமாக வேண்டினால், கெடுதிகள் வருவதில்லை. வெளிநாடு செல்வோர், பாஸ்போர்ட்டில் மிக கவனமாக இருப்பது நல்லது. ‘கேட்ஸ் ஐ’ மோதிரம் அணிவதும் நல்லது.

எனவே கரும்புள்ளி நன்மைக்கும்  தோன்றும். கெடுதிக்கும் தோன்றும். எப்படியும் கரும்புள்ளி அதன் மகத்துவத்தை வெளிப்படுத்தும்.

நன்றி – மூன்றாம் கோணம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: