Sunday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாறிவரும் மங்கையர் உலகம்! – ஆதங்கத்தில் ஆடவர் உலகம்! – சுவாரஸ்யத் தகவல்கள்

மாறிவரும் மங்கையர் உலகம்! – ஆதங்கத்தில் ஆடவர் உலகம்! – சுவாரஸ்யத் தகவல்கள்

மாறிவரும் மங்கையர் உலகம்! – ஆதங்கத்தில் ஆடவர் உலகம்! – சுவாரஸ்யத் தகவல்கள்

அழகு, பெண்கள் என்றாலே அழகு தான். பெண்களின்றி கவிதைகளோ, காவியங்களோ சாத்தியமற்றவை. பெரும்பாலான

இலக்கியவாதிகள் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் எழுதிய இலக்கிய ங்களுக்கு பின்புலமாகவும், பின்பலமாகவும் இருந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான்.

பெண்கள் இந்தியாவின் மாபெரும் சக்தி. எத்தனை ஆண்பிரதமர்கள் பதவியேற்றாலும் , இந்திராகாந்தி என்ற ஓர் இரும்புபெண் மணி தான்முன்னிலையில் இருப்பவர். இப்படிப்பட்ட இந்தியாவில் பெண்களின் உண்மை அழகு அழிந்து வருகிறது என்றால் அது மிகையாகது.

நெற்றி வகுடு முதல் கால் கொலுசு வரை இந்திய பெண்களின் அழகு அனைத்திலும் நிறைந்திருந்தது. ஆனால், இன்றைய மேற்கத்திய நாகரிக த்தின் ஆதிக்கம் மற்றும் அல்ட்ராமாடர்ன் வாழ்வியல் முறை அனைத்தையும் சிதைத்துக் கொண்டு வருகிறது….

ரெட்டை ஜடை

பள்ளி பருவத்தை நினைவூட்டுகிறது. இரட்டை ஜடை பின்னி, இருஜடைகளையும் இணைக்கும் மல்லிகை பூ பாலம். அதன் அழகு. அய்யோ, அரும்பு மீசை இளசுகளை பயணிக்க தூண்டும் அழகு அல்லவா அது. இன்று ஒற்றை ஜடை பின்னுவதை காணவே கனா காணவேண்டும் போல. தூக்கிவாரி ஆண்களை போல திரிகின்ற னர் பெண்களும்.
மஞ்சள் பூசிய முகம்

மஞ்சள்என்றாலே வெள்ளிக்கிழமைதான் ஞாபகத்திற்குவரும். அன்றைய நாட்களில் ஏதோஓர் எக்ஸ்ட்ரா சந்தோஷம் காரணமே இல்லாமல்பூக்கும். மஞ்சளில் இருந்த மகத்துவம் அறிந்துதான், பெண்களு க்கு சருமபிரச்சனைகள் வராமல் இருக்க, முன்னோர் மஞ்சள் பூசி குளிக்க கூறினர். இன்று மஞ்சளின் நற்குணம் இருக்கிறது என்று விற்கப்படும் பூச்சுகளை வாங்கு பூசி க்கொள்ளும் பெண்கள், மஞ்சள் பூச தயங்குகிறார்கள்.

பாவாடை தாவணி

இது தமிழ்நாட்டு பெண்களின் ஆழகை அதி கரித்து காட்டும் உடை. இன்று ஏதேனும் பண்டிகை நாட்களில் மட்டும்தான் அணி கின்றனர். உண்மையிலேயே கல்லூரிக ளிலும், பண்டிகை நாட்களிலும், ஆண்கள் எப்போது பெண்கள் பாவாடை தாவணி அணிந்து வருவார்கள் என்று ஏங்குவது உண்டு. ஆனால், இன்றைய பெண்களுக்கு புடவை, பாவாடை தாவணி அணியவே மறந்து வருகிறார்கள் என்பது தான் நிதர்சனம். (ஒரு சிலரை தவிர)
இடையாடும் நடையழகு

நீங்கள் 80களில்வெளிவந்த திரைப்படங்களை கண்டால், கண்கூட பார்க்கலாம் இந்த இடையாடும் நடையழகை. இன்று பூனை நடை நடக்கிறேன், ஹீல்ஸ் அணிந்து நடக்கிறேன் என்று, அந்த நடை பழக்கத்தையே மறந்து விட்டனர் நம்நாட்டு பெண்கள். மனதை கொள்ளையடி த்து செல்லும் அழகு அந்த இடையாடும் நடையழகு.
கால் கொலுசுகள்

மணிகள் தொங்கும் அந்த கால் கொலுசுக்கு பெண்கள் அடம்பிடித்த காலம் மலையேறிவிட்டது. பிளாஸ்டிக் கொ லுசுகளை விரும்பு அணிகின்றனர் இன்றைய பெண்கள். அது பார்ப்பதற்கு மட்டும் தான் அழகு. ஆனால், பழைய மணி கொலுசுகள் குருடனை கூட மெய் சிலிர்க்க வைக்கும் சத்தம் எழுப்பும்.
கை வளையல்கள்

வேலைக்குசெல்லும் பெண்கள் பெரும்பாலு ம் கை வளையல்கள் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். கேட்டால் கணினியில் வேலை செய்யும்போது இடையூறாக இருக் கிறதாம். அதுவும் சரிதான். ஆனால், அதற் கென இருந்த தனிஅழகை இழந்துவிட்டீர் பெண்களே!!!
வட்டமான குங்கும பொட்டு

குங்குமம் வைப்பதிலேயே வேறுபட்டு இருக்கும் அந்த பழைய வட்டமாக வைக்கும் குங்குமபொட்டு, அம்மன்பட ரம்யாகிருஷ்ணன் மாதிரி பெரியாதாக இல்லாவிட்டாலும் சிறியளவில் வைத் துக்கொண்டு சுண்டி இழுக்கும் அழகு அந்த வட்டமான குங்கும பொட்டில் இருக்கும். மற்றும் வாட்டமான முகங் களை கூட அந்த பொட்டு புத்துணர்ச்சி யாக காட்டும். இன்று பல பெண்கள் ஸ்டிக்கர் பொட்டுகளை கூட வைப்ப தில்லை. பிறகு எங்கே வட்டமான குங்கும பொட்டை எதிர்பார்ப்பது.

நேர் எடுத்த வகிடு

நேர் எடுத்த வகிடும், தலையின் இரு ஓரங்களிலும்அருவியை போலசரியும் கூந்தலும் சொல்லில் அடங்காத அழகு. என்னதான் மணிக்கணக்கில் செலவழித் து டிசைன், டிசைனாக முடி வாரினாலும், இதற்கு ஈடாகுமா!!!
கொலுக்கு முழுக்கு உடல் வாகு

கொஞ்சம்சதைப்போட்டால்கூட கண்ட டயட்டும், பட்டினியாக இருந்தும் உடல் மெலிந்துவிடுகிறா ர்கள். ஆனால், பெண்களுக்கு அழகே அந்த கொழுக்கு முழுக்கு உடல் வாகு தான். மற்றும் இந்த உடல்வாகுதான் பிரசவிக்கும் போதும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க தவிர்க்கும். ஒல்லியாக இருப்பது அழகல்ல, நோய்!!!
வெட்கப்படும் பார்வை

பெண்கள் மொத்தமாக வெட்கப்படுவதே இல்லை என்றெல் லாம் இல்லை. ஆனால், அவ்வப்போது அவர்கள் ஆண்கள் மீது தூவும் அந்த வெட்கப்படும் பார்வை தொலைந்துவிட்டது என்பது தான் ஆண்களின் குமுறல்கள்!!! இது ஆண்களின் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து, காதலை வளர்க்கும் உரம் என்று எப்படி வேண்டுமானலும் கூறலாம்.

=> பாலாஜி விஸ்வநாதன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: