
மென்மையான, அழகான, பொலிவான உள்ளங்கைகளுக்கு . . .

• ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து நான்கு (அ) ஐந்து சொட்டுக்கள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக்கொள் ளுங்கள். இதை கைகளுக்கு பூசி, தேய்த்துக் கழுவுங்கள். ஆலிவ் எண்ணெய் தோலுக்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கும். உருளை, கருமையை எடுத்துவிடும். நிறைய தண்ணீர், பால், ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ் வகைகளை அருந்து வதும் அவசியம்.
•வைட்டமின்-சி குறைபாட்டால் சிலருக்கு கைகளி ல் தோல் உரியலாம். டிடர்ஜென்ட் பவுடர், சோப் போன்றவற்றாலும் அலர்ஜி ஏற்பட்டு தோல் உரிய லாம். 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடருடன் தயிர் கலந்து கை, உள்ளங்கை, விரல் இடுக்கில் பூசி, மிதமான வெந்நீரில் தேய்த்துக் கழுவுவதுடன், மறக்காமல் நெல் லிக்காய் ஜூஸ் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
• நகத்தின் நிறம் சிலருக்கு திடீரென பழுப்பு நிறத்தில் மாறலாம். இரும்புச் சத்து குறைபாடுதான் இதற்குக் காரணம். பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சிய, வெதுவெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.
• அதீத வெயிலோ, கடும்குளிரோ சட்டென நம்மை பாதிக்கும்போது, விரல் நகம் உடையலாம். பாதாம் பாலை கை, விரல், நகங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். நகம் வலுவடையும்.
• உள்ளங்கை, கையின் மேல்பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தின மும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறக்க, தோலின் சுருக்கங்கள் நீங்கி, தசைகள் விரியும்.
•நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒருஎலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும்.