Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கழிவறையில் ரூ.20 கோடியை பதுக்கிய அரசு உதவிப் பொறியாளர்! – அதிர்ச்சியில் உறைந்த காவல் உயர‌திகாரிகள்

கழிவறையில் ரூ.20 கோடியை பதுக்கிய அரசு உதவிப் பொறியாளர்! – அதிர்ச்சியில் உறைந்த காவல் உயர‌திகாரிகள்

கழிவறையில் ரூ.20 கோடியை பதுக்கிய அரசு உதவிப் பொறியாளர்! – அதிர்ச்சியில் உறைந்த காவல் உயர‌திகாரிகள்

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி பிடிப்பட்ட‍ செய்திகளை நீங்கள் எத்த‍ னையோ

படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் எல்லா செய்திகளையும் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடிக்கும் அளவுக்கு அதிர்ச்சியான‌ செய்தியாக இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் ஹௌரா மாவட்டத்தில் அரசு உதவிப் பொறியாளர் ஒருவரது வீட்டில் சோதனை செய்த காவல்துறைக்கு அலிபாபா குகைக்குள் நுழை ந்தது போன்ற உணர்வுதான் ஏற்பட்டிருக்கும். கார்ப்ப ரேஷன் அலுவலகத்தில் துணை உதவிப் பொறியாள ராக பணியாற்றும் பிரணாப் அதிகாரி என்பவரது மாத ச்சம்பவம் ரூ.45,000 இவர்மீது ஏராளமான லஞ்சப் புகார்கள் எழுந்ததை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை கட்டடம் கட்ட அனுமதி வழங்க ரூ.1 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதை யடுத்து அவரது வீட்டை காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, தரையில்பதிக்கப்பட்ட டைல்ஸ்களுக் குக்கீழே, கப்போர்டுகளில், தரை விரிப்புகளுக்கு க் கீழே,சோபாக்குள், பத்ரூம், கழிவறைக்குள்ளும் ஏராளமான பணக் கட்டுகளும், தங்க, வைர நகைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்தனர். ரூ.20 கோடி மதிப்பி லான பணக்கட்டுகள், ரூ.14 லட்சம் மதிப்பி லான தங்க நகைகள், ரூ.58 லட்சம் மதிப்பி லான முதலீட்டுப் பத்திரங்கள் கைப்பற்றப் பட்டன. கைப்பற்றிய பணத்தை எண்ணுவத ற்கு, 3 பணம் எண்ணும் இயந்திர ங்களை காவல்துறையினர் கொண்டு வந்து 24 மணி நேரமாக எண்ணி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையச்செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: