Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போர்க்களத்தில் அரக்கனை கொன்ற சீதா! – இராமாயணம் சொல்லாத நிகழ்ச்சி இது! – அபூர்வ தகவல்

போர்க்களத்தில் அரக்கனை கொன்ற சீதா! – இராமாயணம் சொல்லாத நிகழ்ச்சி இது! – அபூர்வ தகவல்

போர்க்களத்தில் அரக்கனை கொன்ற சீதா! – இராமாயணம் சொல்லாத நிகழ்ச்சி இது! – அபூர்வ தகவல்

சூர்ப்பனகையின் தூண்டுதலால் இராவணனால் நயவஞ்சகமாக சீதை கடத்திக்கொண்டு போய் இலங்கையில்

உள்ள‍ அசோக வனத்தில் சிறை வைத்தான். இதனை ஜடாயு மூலமாக அறிந்த ஸ்ரீராமர் வானரசேனைகளோடு  சென்று விபீடன் துணையோடு இராவணனைக் கொன்று தன் மனைவி சீதாவை மீட்டதோடு, இராவணன் தம்பி விபீடனை அங்கே அரசாளவைத்த ஸ்ரீராமர், லக்குவனோடும் சீதை யோடு அயோத்தி திரும்பி அந்நாட்டின் அரசனாக பட்டா பிஷேகம் செய்துகொண்டார். இதுவரையே இராமாய ணத்தில் வரும் நிகழ்வுகள். ஆனால் இங்கே இராமாய ணத்தில் சொல்ல‍ப்படாத நிகழ்ச்சி கீழே விரிவாகவும் சுருக்க‍மாக சொல்ல‍ப்பட்டுள்ள‍து. படித்துபயனுறுங்கள் .

கும்பகர்ணனின் மகன் மூலகன்; இவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த பிரம்மா, அவன் முன் தோன்றி னார். அவரை வணங்கிய மூலகன், ‘என் முடிவு ஒரு பெண்ணால் தான் வர வேண்டும்; மற்றபடி தேவாதி தேவர்களாக இருந் தாலும், அவர்களால் இறப்பு வரக்கூடாது…’ என்று வேண்டியதுடன், பல அபூர்வ வரங்களையும் பெற்றான்.

இதனால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில், அதர்மங்களை செய்தான். ஒரு சமயம், தன் ராட்சச சைனியங்களுடன் அட்டூழியம் செய்தபடிவந்தவன் ‘என்னை எதிர்க்க இவ் வுலகில் யாருமில்லை. இப்படிப்பட்ட என் ராட்சச வம்சம், அந்த சண்டியான சீதையால் அல்லவா அழிந்தது என்றுகோபத்துடன் கத்தினான். அப்போது அங்கிருந்த ரிஷி ஒருவர், அவனைப் பார்த்து, ‘ யாரை சண்டி என்று இகழ்ந்தாயோ, அச்சீதையாலே உன் உயிர் போகக்கடவது’ என்று சாபம் கொடுத்தார்.

இந்நிலையில், ராட்சச சைனியத்துடன் சென்று, விபீஷணரை வென்று, சிறையில் அடைத்தான் மூலகன். சிறையில் இருந்து தந்திரமாக தப்பிய விபீஷணர், ஸ்ரீராமரிடம் சென்று முறையிட்டார்.

உடனே, ஸ்ரீராமர் தன் படைகளுடன் சென்று மூலகனுடன் போரிட்டு, அவனை கொல்ல முயலும்போது, பிரம்மா தோன்றி, ‘ரகுநந்தனா… இவனுக்கு , பெண்ணால்தான் மரணம் என்று வரம் தந்துள்ளேன். அதை உறுதிபடுத்துவ துபோல, சீதையால்தான் இவனுக்கு மரணம் என்று ரிஷி ஒருவரும் சாபம் இட்டுள்ளார். ஆகையால், தாங்கள் இவனைக் கொன் றால், எங்கள் வார்த்தை பொய்யாகும்…’ எனக் கூறினார்.

அதை ஏற்ற ஸ்ரீராமர், அயோத்தியில் இருந்து சீதையை வரவழைத்து, அவளிடம் நடந்ததை விவரித்தார். இதனை கேட்ட சீதை, போர்க்களம்புக சம்ம‍தித்து, தனது கைகளாலேயே அந்த மூலகன் கதையை முடி த்தார். அவதார புருஷரான ஸ்ரீராமரே முறை மீற வில்லை. ஆனால், கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்ற மூலகனோ, தவப் பலனை அதர்ம வழியில் உபயோகித்து, முடி வை அடைந்தான். கடுமையாக உழைப்ப தில் மட்டுமல்ல, உழைப்பின் பலனை உபயோகப் படுத்துவதிலும் வாழ்க்கை யின் ரகசியம் அடங்கி உள்ளது.

=> சுசீலா

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: