Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தகப்பனாரைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது…

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தகப்பனாரைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது…

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தகப்பனாரைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது…

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது 45; பெற்றோருக்கு நான் ஒரே பெண். கூடப் பிறந்தவர்கள் இரு அண்ணன்கள்; எங்கள் மூவருக்கும் திருமணமாகி,

குழந்தைகள் உள்ளனர். எனக்கு, 18 – 19 வயதுகளில் இரு பெண் குழந்தை கள். இருவரும் படிக்கின்றனர்.

திருமணம் ஆகும் வரை, பெற்றோர் மற்றும் அண்ணன்களுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என், 23வது வயதில் திருமணம் நடந்தது. என் கணவர் என்னை விட, ஆறு வயது மூத்தவர். அரசு வேலையில், நல்ல சம்பளம் வாங்குபவராக இருந்தார். நானும், நல்ல வேலையில் இருக்கி றேன். என் கணவருடன் உடன் பிறந்தோர் இரு அண்ணன்கள், ஒரு அக்கா. அனைவருக்கும் திருமணமாகி, சந்தோஷமாக உள்ளனர்.

எங்களை மிகவும் நல்ல முறையில் வளர்த்தனர் என் பெற்றோர். உறவி னர் மற்றும் நண்பர்களை மதித்து, பணிவுடன் நடந்து கொள்வோம். நானும், என் இரு அண்ணன்களும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

எனக்கு திருமணம் நடப்பதற்கு முன், என் கணவரைப் பற்றி அவர்கள் ஊரில் உள்ள ஒருவரிடம் விசாரித்துள்ளார் என் தகப்பனார். அவர், என் கணவர் மற்றும் மாமனாரைப் பற்றி மிக நல்ல விதமாகவும், உயர்வாக வும் கூறியுள்ளார். அதை நம்பி, என்னை இவருக்கு திருமணம் செய்து வைத்தனர் என் பெற்றோர்.

கல்யாணத்திற்கு பின்தான், என் தகப்பனாருக்கு கிடைத்த தகவல் பொய் என்றும், என் கணவர் மிகவும் கெட்ட குணம் கொண்டவர், குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும், இவரைப்பற்றி நல்லவித மாக தகவல் கூறியவர், என் கணவரின் உறவினர் என்பதும் தெரிந்தது.

தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமே என வாழ்ந்து வருபவர் என் கணவர். வீட்டுச் செலவுக்கு பணம் தர மாட்டார்; நான் தான், வீட்டுச் செலவுகள் அனைத்தையும் ஏற்று, குடும்பத்தை இன்று வரையில் நடத்தி வருகிறேன். அவர் நல்ல வேலையில் இருந்தும், பணம் சம்பாதிக்கும் வெறியில், குதிரை ரேசுக்கு போவதும், சூதாடவும் ஆரம்பித்தார். அது, இன்றும் தொட ர்கிறது. வீட்டின் அருகே உள்ளவர்களுடன் அதிகம் பழக மாட்டார்; பேச மாட்டார். மற்றவர் முன் நல்லவன் போல் நடி ப்பார். ஆனால், என்னை பல்வேறு வழிகளில் இம்சித்து வந்தார். முதல் சில ஆண்டுகளில் அடி, உதை, சகஜம். சில நேரங்களில் இரவில், என்னை வீட்டிற்கு வெளியே தள்ளி, கதவை பூட்டிக் கொள்வார்.

அவரது கெட்ட குணங்களை வெளியே சொன் னால் என் பெற்றோர் மற்றும் அண்ணன்கள் வேதனைப்படுவர் என்பதால்அனைத்தையும் பொறுத்துவந்தேன். ஆனா ல், விஷயம் எல்லைமீறி, இவரைப்பற்றி என் வீட்டினருக்கு தெரிந்துவிட் டது.

எங்கள் குடும்பத்தார், என் மாமனாரிடம் என் கணவரின் கெட்ட நடவடிக் கைகளைக்கூறி, அவரை கண்டிக்கும்படி கேட்டுக்கொண்ட போதெல்லா ம், அவர் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், என் மாமியாரும், மாமனாரும் இறந்து விட்டனர்.

இதன் பின்பும், என் குடும்பத்தார், என் கணவரின் உடன் பிறந்தோரிடம் சென்று முறையிட்டு, அவரை நல்வழிப்படுத்துமாறு பல முறை கேட்டு விட்டனர். ஆனால், அவர்கள் சுயநலவாதிகளாகவே உள்ளனர். தம்பிக்கு கல்யாணம் நடந்ததும், தங்கள் பொறுப்பு முடிந்தது என்று ஒதுங்கிக் கொண்டனர். மேலும், என் கணவரின் கெட்ட குணம், அவர்களுக்கு முன் பே தெரிந்து இருந்ததால், எனக்கு அவர்கள் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை.

என் கணவர் மீது, அவர் வேலை செய்த இடத்தி ல் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இறுதியி ல், சில ஆண்டுகளுக்குமுன், அவரை வேலை யில் இருந்து நீக்கி விட்டனர். இருப்பினும், ஓய்வூதியமாக மாதம், 17,000 ரூபாய் வாங்குகிறார். இந்தத் தொகை, அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்கம் போல் இப்பணத்தையும் தானே செலவு செய்து, வீட்டிலேயே வெட்டியாக உட்கார்ந்து, குடித்துக் கொண்டும், ரேசுக்கும் போய் வருகிறார்.

வீட்டில் உள்ள நகைகள் அவ்வப்போது காணாமல் போகும். எனக்கு நகை கள் மீது கொஞ்சமும் நாட்டம் இல்லை என்றாலும், இரு பெண்கள் இருப்ப தால், நானே அவற்றை அடகு கடைகளில் பணம் செலுத்தி மீட்டு வருகி றேன். சில நேரங்களில், ‘நகைகளை காணோம்…’ என்று காவல் நிலைய த்தில் புகார் செய்து, இவரை மாட்டி விடலாம் என்று தோன்றும். இருப்பி னும், குடும்ப கவுரவத்திற்காக விட்டு விடுகிறேன்.

ஒரே வீட்டில் இருந்தாலும் நானும், என் இரு பெண்களும் அவருடன் பேசு வதில்லை. நன்றாக விசாரிக்காமல், குணம் கெட்டவரை எனக்கு கல்யாணம்செய்து வைத்து விட்டதாக எண்ணி, வேதனைப்படுகிறார் என் அப்பா. என் இரு பெண்களின் எதிர்காலத்தை மனதில் இருத்தி, வீடு ஒன்றை எனக்கு எழுதி வைத்துள்ளார் அப்பா. இதில் தான், நாங்கள் கடந்த, 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகி றோம். இவ்வீட்டை தன் பெயருக்கு எழுதித் தரவில்லை என்று மிகுந்த கோபத்துடன் கத்தி, அவ்வப்போது என் பெற்றோரை கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். ஆனா லும், சில நேரங்களில் அவர்களிடமே ஏதாவது பொய் சொல்லி பணமும் வாங்குவார்; அதை திருப்பித் தரவும் மாட்டார்.

ஒரு கட்டத்தில், வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து ஆலோசனை கேட்டோ ம். மகளிர் காவல் நிலையத்தில், புகார் தருவது அல்லது விவாகரத்து பெற்றுக் கொள்வது என, இரண்டு வழிகளைக் கூறினார். என், இரு பெண் களின் திருமண வாழ்க்கை, அவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்ப கவுரவத்தை நினைத்து, அவற்றை தவிர்த்து விட்டோம்.

தற்போது, வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் இருப்பவர், எந்நேரமும், ‘டிவி’யை சத்தமாக போட்டு, பெண்கள் படிப்பை கெடுக்கிறார். அத்துடன், தேவையில்லாத நேரங்களில்கூட ‘ஏசி’ போடுவதுடன், வீட்டிலேயே குடி க்கிறார். தினமும் நிறைய சிகரெட் குடித்து வீடே நாறும்படி செய்கிறார். அவர் எங்களுடன் இருப்பதை நானும், என் பிள்ளைகளும் விரும்பவில் லை. அவர் வீட்டைவிட்டு வெளியேறி னால் போதும் என்று நினைக்கிறோம்.

ஆனால், என் இரு பெண்களுக்கும் கல் யாணம் செய்ய வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தகப்பனாரைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது… இவரது கெட்ட நடவடிக்கைகள் அவர் களுக்கு தெரியும் போது, என் பெண்களின் எதிர்காலம் என்னவாகும்… இவ்விஷயம் என் மனதில் கவலையை ஏற்படுத்துகிறது.

அம்மா. நாங்கள் அனைவரும் மனநிம்மதியோடு, சந்தோஷமாகவாழவும் , என் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்க, என் கணவர் விஷயத்தில் நான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, தங்கள் பத்திரிகை மூலம் அறிவுரை கூறுங்கள்.

— தங்கள் அன்புள்ள மகள்
அன்புள்ள சகோதரிக்கு —

ஒரு மோசமான கணவன் எப்படி இருப்பான் என்பதற்கு உதாரணம், உன் கணவன். குடிகாரன், ஊதாரி, சூதாடி, மனைவி யை சித்ரவதை செய்யும் கொடுமைக்காரன்; தன் சுகமே பெரிதென நினைக்கும் சுய நல வாதி. பணி செய்யும் இடத்தில் கெட்ட பெயர் சம்பாதித்து பணியை விட்டு நீக்கப்பட்ட பொறுப்பற்ற ஆசாமி. இத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட கணவ னை, மகள்களின் கல்யாணங்களை முன்னிட்டு, பொறுத்து போவது உசிதமல்ல.

கணவரின் துர்நடத்தைகளை, புகாராக எழுதி மகளிர் காவல் நிலையத்தி ல் சமர்ப்பி. பெண் காவல்துறை ஆய்வாளர், உன் கணவரை கூப்பிட்டு கண்டிக்கட்டும். தொடர்ந்து மூன்று முறை புகார் கொடுத்த பின், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய். விவாகாரத்து மனுவில், ஜீவனாம்சம் கேள்; குடிகார கணவனை உங்களுடன் வைத்திரு ந்தால் தான், உன் மகள்களின் திருமணம் பாதிக்கப்படும்.

உன் மூத்த மகளுக்கு வயது, 18. திருமணத்திற்கு குறைந்த பட்சம் இன்னு ம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த 5ஆண்டுகள் அவகாசத்தில் கணவன் இல்லாமல் நீயும், தந்தை இல்லாமல் உன் மகள்களும் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

நீ விவாகரத்து பெற்றவள் என்ற தகவல் தெரிந்தவர்களே, உன் மகள்களை பெண் கேட்க வருவர். தகவல் தெரியாதவர்களுக்கு நீயே சொல்லி விடு.

சமூகம் என்ன சொல்லுமோ என பயந்து, கூடுதல் சுமையை சுமக்காதே. மகள்களை நன்கு படிக்கவைத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, நல்ல வரன் களாக பார்த்து திருமணம் செய்து வை. அடுத்த, எட்டு ஆண்டுகளுக்கு இது உன் வாழ்க்கை குறிக்கோளாய் இருக்கட்டும். உன் முடிவு மற்ற குடிகார கணவ ன்களை பெற்ற மனைவிமார்களுக்கு எடுத்துக் காட்டாய் அமையட் டும்.

புலம்பியதுபோதும் கொதித்தெழு. காலுக்கு பொருந்தாத காலை கடிக்கும் செருப்பை அணிந்து, அவதிப்படாதே. தூக்கி எறி.

உன் இரு மகள்களுக்கு, நல்ல வரன்கள் அமைய வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், தினமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: