இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்டகாசமான லேட்டஸ்ட் பிராண்டட் நகைகள் – ஒரு பார்வை
இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்டகாசமான லேட்டஸ்ட் பிராண்டட் நகைகள் – ஒரு பார்வை
அவ்வப்போது மாறிவருவது இயற்கையே அதிலும் குறிப்பாக பெண்களு க்கு அழகுணர்ச்சியும் அதிகம் இருப்பதால்
புதுப்புதுவிஷயங்களைவரவேற்பதில்முதன்மையாக இருப்பர். பெண்கள் , தாங்கள் அணியும் நகைகளில் இந்த மாறுதல்களை யும் புதுமைகளையும் அதிகமாய் வரவேற்பதால்தான் ஆபரண தொழில் நுட்பத்திலும் பல்வேறு வளர்ச்சிகளை காண முடிகிறது.
இன்றைய ஆபரண தொழில் நுட்பம் மூலம் கனிணிகளை பயன்படுத்தி பல புதிய டிசைன்களை வடிவமைக்கின்ற னர். அழகிய நுணுக்கமான வேலைப்பாடு நிறைந்த நகை கள் அந்தந்த நிறுவனங்களின் பிராண்ட் பெயர்களுடன் பிரபலமாகி வருகிறது.
இப்படி தயாரிக்கப்படும் நகைகளில் பலவும் பழைய கலை நயத்துடன் இன்றைய நவீன கலைநுட்பத்துடன் சேர்ந்து பிரமிப்பான அழகிய வடிவங் களை பெற்று ஜொலிக்கின்றன. இன்றைய பெண் களுக்கு ஏற்ற வித்தியா சமான பல டிசைன்கள் 18 காரட் தங்கத்தில் எடுப்பான சிறுசிறு வைரங்கள் பதிக்கப்ட்டு நேர்த்தியாகவும், மெல்லியதாகவும் செய்யப்படுகின்றன.
18 காரட் என்பதால் மின் நுணுக்கமான மெல்லிய நகையாக இருந்தாலும் அது சீக்கிரமாக அறுந்து விடுவதோ, வளைந்துவிடுவதோஇல்லை. மேலும் இவற்றில் ஜொலிக்கு ம் வைரங்கள் பதிக்கப்படுவதால் சிறியதாக இருந்தாலும் ஜொலிப்பாகவு ம் பார்த்தால் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கி ன்றன.
ஒருவரின் வயது, உயரம் மற்றும் தோற்றத்தை கருத்தில் கொண்டு நகைகளை தேர்வுசெய்வது இன்றைய பெண்களின் ரசனையாக உள்ளது. இளம்பெண்கள் பொதுவாக
சிறிய ஸ்டட்கள், சிறுகற்கள் பதித்த நகைகள், மெல்லிய சங்கிளி கொண்ட சிறு பென்டென்ட் களையே விரும்புகின்றனர்.
கல்லூரி பெண்கள் மெல்லிய மோதிரங்களை எல்லா விரல்களிலும் அணிந்து கொள்வதையும், மெல்லிய ப்ரேஸ்லெட்டுகளை ஒன்றுக்கு மேற்பட்டு கைகளில் அணிந்து கொள்வதையும் விரும்புகின்றனர்.
=> சுதா