Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மகளையே தங்கை என்று கூறி 3வது திருமணம் செய்து, கொலைகாரியான தாய் கைது – திடுக்கிடும் பின்ன‍ணி தகவல்கள்

மகளையே தங்கை என்றுகூறி 3வது திருமணம் செய்து, கொலைகாரியான தாய் கைது – திடுக்கிடும் பின்ன‍ணி தகவல்கள்

மகளையே தங்கை என்றுகூறி 3வது திருமணம் செய்து, கொலை காரியான தாய் கைது – திடுக்கிடும் பின்ன‍ணி தகவல்கள்

மும்பை தொழிலதிபர் இந்திராணியின் மகள் ஷீனா கொலைச் சம்பவம் தற்போது ஊடகங்களை மட்டுமல்ல, நாட்டையே

 உலுக்கியுள்ளது. மும்பையில் கடந்த 2012-ம் ஆண்டு ஷீனா போரா என்ற இளம்பெண் கொலை செய்யப் பட்டார். அவரது பிணத்தை வனப் பகுதியில் இருந்து மீட்ட போலீசார், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திராணியின் தங்கை என்று மட்டுமே கண்டுபிடித் தனர்.

கொலை வழக்கு விசாரணையில் எந்த துப்பும் துலங்காததால் வழக் கை கிடப்பில்  போட்டிருந்தனர். இந் நிலையில் சரியாக 3 ஆண்டுகளுக் குப்பிறகு, இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷாம் மனோகர் ராய் கடந்த வாரம் போலீஸ் வாகனச் சோதனையில் துப்பாக்கியுடன் பிடிபட, அவரிடம் பழைய வழக்கு பற்றி காவல்துறையினர் கிளறினர். இதில்தான், ஷீனாவை இந்திராணி கொலைசெய்ததும், அவரது உடலை, மனோகர்ராய்தான் வனப்பகுதியில் தூக்கி வீசியதும் தெரியவந்தது. உடனடியா க வழக்கை துரிதப்படுத்திய மும்பை போலீ ஸார், இந்திராணியை கைது செய்ததில், அவரும் உண்மையை ஒப்புக் கொண்டார்.

43 வயதாகும் இந்திராணி, 3வதாக பீட்டர் முகர்ஜி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அப்போது, தனது மகள் ஷீனாவை தனது தங்கை என்றும் மகன் மிகேலை தனது தம்பி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில் பீட்டரின் முதல்மனைவி மூலமாக பிறந்த ராகுலும், ஷீனாவும் நெருங்கிப் பழக, இந்திராணி கொதித்துப் போனார். சகோதர உறவுமுறையினர் காதலிக்கிறா ர்களே என்று அறிந்து உண்மையைச் சொல்ல முடியாமல், அவர்களை கண்டித்துள்ளார்.

காதலர்கள் இவரது பேச்சைக்கேட்காததால், இறுதி யில் இந்திராணி, ஷீனாவைக் கொன்று வீசியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. ஷீனாவைப் பற்றி கேட்டவர்களுக்கு, அவரை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பிவிட்டதாகக் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: