Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிட்டால் . . . அடேங்கப்பா இத்த‍னை நோய்கள் தீருமா?

பொதுவாக மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், வாயு தொல்லை தரக்கூடியது என்ற கருத்துள்ளது. ஒரு வகையில் அது உண் மை என்றாலும், எல்லா

கிழங்குகளும் அவ்வாறு வாயு தொல்லையை தருவதில்லை. சிலரின் உடல்வாகைப் பொறுத்து, இப்பிரச்னை வருவதுண்டு. ஆனால், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அப்பிரச்னை இல்லை. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதயத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது. இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்ப்பும் உள்ளது. மாவுச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில், நிறைய ஊட்டச்சத்து உள்ளது. 100 கிராம் கிழங்கில், 70 முதல், 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு, இதயநோயாளிகளுக்கு மிகவும்ஏற்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதை ஒரு உணவாக மட்டுமே சுவைத்து பழகியவர்களுக்கு, இந்த தகவல் பயன் உள்ளது தான்.

பெயருக்கு ஏற்ப இனிப்பு சுவை உள்ள கிழங்கு இது. இந்தகிழங்கை சாதாரணமாக தண்ணீரில்கொஞ்சம் உப்புபோட்டு வேகவைத்து, தோலை மட்டும் உரித்து அப்படியேசாப்பிடலாம். மிகவும் தித்திப்பாக இருக்கும். பசி தாங்ககூடிய து. பலசத்துக்களும், மருத்துவகுணமும் அதில் உள்ளது

மிககுறைந்த அளவே கொழுப்புள்ளது. இதில், நிறைய நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின்கள் மற்று ம் தாது உப்புக்கள் உள்ளன. மாவுச்சத்தில் கார்போ ஹைட்ரேட் மூலக்கூறுகளாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தளவு உண்ணலா ம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில், அதிகளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளன. இவை இயற்கை நோய் எதிர்ப் பு கொண்டதாகும்.

உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி, தேக ஆரோக்கியம் மற்றும் தோல்நரம்பு மண்டலசெயல்பாட்டிற்கு உதவு ம். நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற,

உடலுக்கு அவசியமான தாது உப்புக் களும் உள்ளன. இவை புரதம் மற்று ம் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின்செயல்பாட்டிற்கும் உதவும். கிழங்கைவிட அதன் இலைகள், அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிகளவில் இரும்பு சத்து, வைட்டமின் C, வைட்டமின் K, பொட்டா சியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளன. சக்கரை வள்ளிக்கிழங்கை மாதத்தில் இரண்டு அல்லது மூன்றுமுறை உணவாக கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

=>ம‌லர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: