Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"விவேகானந்தரே…! தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்!" – வீரத்துறவி வாழ்வில் ஓர் உண்மைச்சம்பவம்

விவேகானந்தரே…! தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்! – வீரத்துறவி வாழ்வில் ஓர் உண்மைச்சம்பவம்

விவேகானந்தரே…! தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்! – வீரத்துறவி வாழ்வில் ஓர் உண்மைச்சம்பவம்

ராஜபுதனத்தில் ஆழ்வார் என்ற சமஸ்தான மன்ன‍ரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்த சமயத்தில் நடந்த ஓர் உண்மைச்சம்பவம். விவேகா னந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய

அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர், விவேகானந்தரை தனது அரண்மனையிலே யே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார்.

அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும், பலவிதமான மூட நம்பிக்கை களால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம்.

ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்துமதத் தத்துவங் கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மன்னர் விவேகானந்தரை நோக்கி, “சுவாமி, இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிரற்ற கற்களாலும், உலோகங்களா லும் செய்யப்பட்ட தெய்வத்திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக் கு ஒவ்வாத செயல்கள் அல்லவா? கல்லிலும், செம்பி லுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று நீங்கள் நம்புகி றீர்களா?” என்று கேட்டார்.

மன்னரின் அக்கேள்வியைக்கேட்டு சுவாமி விவேகா னந்தர் புன்முறுவல் பூத்தார்.

மன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெறும் வாய்விளக்கமாகக் கூறிப்போக்கமுடியாது என்று அவர் நினைத்தார்.

வேறு எந்தவழியில் மன்னரின் ஐயத்தைப்போக்குவது என்று யோசித்த விவேகானந்தரின் கண்களில் சுவரில் மாட்டியிருந்த மன்னரின் தந்தையின் பெரிய திரு வுருவப் படம் கண்களில் பட்டது.

“அது யாருடைய உருவப் படம்?” என்று விவேகா னந்தர் வினவினார்.

“என் தந்தையின் படம் இது” என்றார் மன்னர்.

“இது என்ன படமா? எவ்வளவு அவலட்சணமான உருவம்! இந்தப் படத்தை இந்தஇடத்தில் மாட்டிவைத்திருப்பதால் இந்தஅறையின் அழகே கெட்டுப்போய்விடுகிறது. இதைக்கழற்றி சுக்கு நூறாக உடைத்துக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள்!” என்று கூறினார் விவேகானந்தர்.

அவர் சொன்னதைக் கேட்டு மன்னர் ஆவேசமடைந்து விட்டார்.

“சுவாமி… என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்! இதே சொற்களைவேறு யாராவது சொல்லியிருந்தால் சுவாமி விவகானந்தரே! இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்! என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவரு டைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலா ம்?” என்று ஆர்ப்பரித்தார்.

விவேகானந்தரோ மிகவும் நிதானமாக மன்னரை நோக்கி, “மன்னவரே, உமது தந்தை மீது எனக்கு எவ்விதத் துவேஷமும் கிடையாது. அவரை இழிவுபடுத்துவதும் எனது நோக்கமல்ல. தெய்வத் திருவுருவ வழிபாட் டைப்பற்றி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குவதற்காகவே நான் இவ்வாறு நாடகமாடினேன்.

உங்கள் தந்தையாரின் உருவப்படத்துக்கு உயிர் இல் லை. இது ஓர் ஓவிய ரால் வரையப்பட்ட ஓவியம் தான். இந்த ஓவியத்தினுள் உங்கள் தந்தை ஒளிந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் தந்தைமீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மதிப்பு, மரியாதை கார ணமாக இதை ஓர் நினைவுச் சின்னமாகப் போற்றி வருகிறீர்கள். தெய்வத் திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவ தன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போ து இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்து வதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன” என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவு பெற்றார் மன்னர்.

=> ராஜு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: