Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொட்டாவி விடும் செயலுக்கான பின்ன‍ணித் தகவல்கள்!

கொட்டாவி விடும் செயலுக்கான பின்ன‍ணித் தகவல்கள்!

கொட்டாவி விடும் செயலுக்கான பின்ன‍ணித் தகவல்கள்!
நம்மோடு பேசிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து உரையாடும் போதோ, நமக்கு சுவாரஸ்யமில்லாத

வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டி ருக்கும் வேளையிலோ, நம்மையுமறியாமல் வாயை மெதுவாக அதே சமயம் வெகுபெரிதாக ஹோவ் என்ற ஓசையுடன் கொட்டாவி விடு கிறோம்.
இந்த செயலுக்கான பின்னணி என்ன? என வெகு ஆண்டுகளாக ஆய்வு செய்துவந்த உடல் கூற்றியல் வல்லுனர்கள், தற்போது அதற்கான காரண த்தை கண்டறிந்துள்ளனர்.

உறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிக மாகும் வேளையில் இதைப் போல் அடிக்கடி வரும்கொட்டாவியானது, சூடாகிப்போன நமது மூளையை  குளிர்விக்கும் ஒரு காரணியாக திகழ்வதாக இந்த ஆய்வை மேற்கொண்ட டொக்டர் நிக் நைட் என்பவர் உறுதிப்படுத்தி யுள்ளார்.

நமது நுரையீரலில் தேங்கிப்போன அளவுக்கதிகமான கரியமிலவாயு (காபன்-டை-ஆக்சைட்) கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு, புதிய பிராண வாயுவை (ஆக்சிசன்) நுரையீரல் உள்வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு கொட்டாவிக்குப் பின் னரும் நமது விழிப்புணர்வு சார்ந்த சுறுசுறுப்பு அதிகரிப்ப தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: