பிஞ்சு கத்தரிக்காய்-ஐ மாதம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
பிஞ்சு கத்தரிக்காய்-ஐ மாதம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
இந்த கத்தரிக்காயில் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போ ஹைடி ரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. மேலும்
வைட்டமின்களும் அதிகளவு இருப்பதால் நாக்கில் உண்டாகும் அலர்ஜியை முற்றிலுமாக குணமாக்குவதி ல் இந்தபங்கு முக்கியமானது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக் கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.
அதுமட்டுமா? நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கெட்டகொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற் கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக் கும் வல்லமைகொண்டது. நீலநிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக் கொள்ள இந்த கத்தரிக்காய் உதவுகிறது. மற்றும் இந்த கத்தரிக்காய் சாப்பிடுவதன் மூலம் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நீரிழி வை கட்டுப்படுத்தவும் இந்த கத்தரிக்காய் பயன்படுகிறது.
எச்சரிக்கை
சிலருக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தினால் இதனை அறவே தவிர்ப்ப து நல்லது. மேலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் 3 மாதங்களுக்கு இந்த கத்தரிக்காயிலான உணவு வகைகளை சாப்பிடக் கூடாது.