Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில்! – வியத்தகு ஆன்மீக தகவல்கள்!

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில்! – வியத்தகு ஆன்மீக தகவல்கள்!

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில்! – வியத்தகு ஆன்மீக தகவல்கள்!

‘ஏழைகளின் ஊட்டி’ என்று பிரபலமாக அழைக்கப்படும் நகரம்தான் ஹாசன் நகரம் இந்நகரம்  கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அங்கே

அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயில் வருடத்திற்கு 10நாட்கள் மட்டு மே திறக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் சிறப்புகளையும் தகவல்க ளையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஆம் ஹாசனாம்பா கோயில் இருப்ப‍தால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என் றே பெயர் பெற்றிருக்கிறது.

இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகிறது.  அக்டோபர் 25-ஆம் தேதியி லிருந்து, ந‌வம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும்கோயில் 24ஆம்தேதியே திறக்கப்பட்டா லும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடை பெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

வினோத நம்பிக்கைகள்!
மாமியார்-மருமகள் கல்! :

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாம ல்வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒருபெண். ஒருநாள்அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ”வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்” என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள்முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்ல ப்படுகிறது.

அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயி லில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர் ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகி றது. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கு ம் அதிசய கோயில்!
 
திருடர்கள் கோயில் :

ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச் செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாகபோகுமாறு சபித்ததாக சொல்லப்படு கிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக ‘ திருடர்கள் கோயில்’ என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில்  வளாகத்தினுள்ளேயே அமைந்திருக்கிறது.

அணையா தீபம் :

ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண் டிருக்குமாம்.

கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்…:

கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும்உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப் படுகிறது.

வாடா மலர்கள் :

ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கு மென்றும் பக்தர்கள் நம்புகி றார்கள். அதுமட்டு மல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப் பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறா ர்கள்.

வரலாறும், புராணமும்! ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்ட ப்பட்டது. இக்கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதோடு, கர்நாடககட்டிடக் கலை யின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிற து. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப் பெயரை பெற்றதாக சொல்ல ப்படுகிறது.

அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டுவந்த ஹாசன்நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர் கள்) வருகைக்குபிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டின் 10நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! புராணக் கூற்றின்படி சப்த(ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திரா ணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலி ருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன்பின்னர் 3கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் 3 கிணறுகளாக 3 கன்னியர்க ளும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

ஹாசனாம்பா கோயில் திறப்பு!

ஹாசனாம்பாகோயில் ஒவ்வொருஆண்டும் தளவார் குடும்பத்தினர்கோயில் நுழைவாயி லில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்து விடப்படுகிறது. ஆண் டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசயகோயில்! அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்து வரப்படும் ஆபர ணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத் துக்கே எடுத்துச் செல்ல ப்படுகின்றன.

=> இராஜா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: