Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழன் தலைநிமிரட்டும்! – இவைகள் வரிகள் அல்ல‍, இதயத்தின் வலிகள்!

தமிழன் தலைநிமிரட்டும்! – இவைகள் வரிகள் அல்ல‍! இதயத்தின் வலிகள்!

தமிழன் தலைநிமிரட்டும்! – இவைகள் வரிகள் அல்ல‍! இதயத்தின் வலிகள்!

இந்த மாத (செப்டம்பர்) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்

தமிழன் என்றுசொல்ல‍டா… தலைநிமிர்ந்து செல்ல‍டா… என்ற கம்பீரமா ன வரிகளில் உயர்ந்து நின்ற தமிழகம் இன்று தமிழன் என்று சொல்ல‍டா தலை குனிந்து செல்ல‍டா என்று

சொல்லுமளவிற்கு தரம் தாழ்ந்தத‍ற்கு காரணம் அரசின் கொள்கை தடுமாற்ற‍மும், தமிழனின் மதுவின் தள்ளாட்ட‍முந்தான்.

வீட்டுக்குத் தெரியாமல், வெளியிலிருப்ப‍வர்கள் பார்க்காமல் தயங்கி தயங்கி… ஊருக்கு வெளியே தலைக்கு முக்காடு போட்டு முகம் மறைத்து மது குடித்த‍ தமிழகம். இன்று வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு வெளிச்ச‍ம் போட்டு தங்களது அன்றாட நிகழ்ச்சி நிரலில் குடிப்பதையும் ஒன்றாக சேர்த்து விட்ட‍தைப் பார்க்கும்போது கும்பி எரிகிறது. கோபம் கொப்ப‍ளிக்கிறது.

போரில் வீரம் காட்ட‍வேண்டிய தமிழன் இன்று வீதி யோர சாக்கடையில் பன்றியோடு படுத்துறங்குகிறான் , தாயைக் காக்க வேண் டிய தனயன் தாயின் தாலிக்கொடியை அறுத்து தனக்குள் சொர்க்க‍ம் புகுகிறான். கட்டிய மனைவி யின் கண்ணீரில் கள்ளின் களியின்பம் காண்கிறா ன். மழலையின் சிரிப்பில் மயங்கவேண்டியவன்.. மயக்க‍த்தின் வெறியில் மழலைகளைவீசி எறிந்து போதை தெளிகிறான்.

த‌டம்புரண்டது தமிழன் மட்டுந்தானா? தமிழகமும் அல்ல‍வா? பொழுது போக்காய் தொடங்கிய மது.. எவ்வ‍ளவு மனித உழைப்பை குடித்திருக்கிறது? எத்த‍னை இலட்சம் குடும்பங்களைக் குட்டிச்சுவராக் கியிரக்கிறது? தமிழக அரசின் தொழில் குடிக்க‍ வைப்ப‍து.. தமிழனின் தொழில் குடித்து கெடுவது,  என்றும் தமிழன் தண்ணி யடிக்க‍த்தான் லாயக்கு என்றும் மற்ற‍ மாநிலத்தவர் முன் தமிழகம் மணமிழந்து கூனி குறுகி நிற்பதற்கு யார் காரணம்?

நாம்எல்லோருமே காரணம் என்பது தான் உண்மை குடிமக்க‍ளுக்கு நண்பனாயிருக்க‍ வேண்டிய காவல் துறை குடிகார மக்க‍ளுக்கு பாதுகாவலனாய் மாறியது உலக மகாகேவல ம். பாடல்களாலும், வசனங்களாலும் காட்சிகளாலும் நடிப்பினாலும் நம் நாடி நரம்புகளில் தேசபக்தியை கிளர்ந்தெழச் செய்த திரைப்பட உலகம் இன்று குடிக்கிற காட்சிகளையும், குத்தாட்ட‍ங்களையும் மட்டுமே திணித்து தங்கள் வருவாயைப்பெருக்கிக்கொள்வது என்ன பெருமை? சாதி மத, இன, கட்சி, பேதமின்றி எல்லோரும் ஒற்றுமையாக குடிப்ப‍து சாத்தியமாகிறது ஆனால் சாதி மத, இன, கட்சி பேதமின்றி எல்லோரும் இணை ந்து குடியை ஒழிக்க‍ப்போராடமுடியவில்லை.  (என்ன‍கொடுமை சார் இது?)

குடிகெடுக்கும்குடி என்று விளம்பரம்செய்கிற அரசா ங்கம் வா வந்துகுடி, குடித்து செத்துமடி, என்று கடை திறந்து வைத்திருப் ப‍து எந்த அரசாக இருந்தாலும் எவருடைய அரசாக இருந்தாலும் அது அப்ப‍ட்ட‍மான அநீதி! சரி குடித்து தலைகுனிந்த தமிழனை எப்ப‍டி தலை நிமிர்த்துவது? தள்ளாடு ம் தமிழகத்தை எப்போது தன்னிலைப் படுத்துவது?

குடும்பஅட்டை, வங்கிகணக்கு, பள்ளிச்சான்றிதழ், உட்பட அனைத்து தனி மனித விவரங்கள் சேகரிப்பில் நீங்கள் குடிப்ப‍வரா? அல்ல‍து உங்களது குடும்பத்தில் குடிப்ப‍வர்கள் யார் யார்? என்று கேள்வி கேட்கப்பட வேண்டும். எத்த‍னை பேர் இதைப் பெருமையோடு பூர்த்தி செய்வார்கள்?

மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்க‍ப்பட வேண்டும்.  அவைகளும் இரவுநேரம் மட்டுமே இயங்கவேண்டும். ஊருக்கொரு மயானம் இருப்ப‍து போல் ஊருக்கொரு சாராயக் கடைபோதும். (இரண் டும் ஒன்றுதானே) மதுவின்மூலம் கிடைக்கும் வரு மானத்தை மாற்று வழியில் பெற என்ன‍ வழி என்ப தை எல்லா கட்சிகளும் எல்லா அமைப்புக்க ளும் ஒன்றினைந்து கண்டறிய வேண்டும். இன்னு மொரு எளிய வழி இரு க்கிறது. அது என்ன‍?

இலவசமாய் எதையும் தரமாட்டோம் என்று தைரியமாய் சொல்லுகிற அரசும், இலவசமா ய் எதையும் பெறமாட்டோம் என்று தன்மான த்தோடு சொல்லுகிற தமிழனும் உரத்த‍ சிந்த னையுடன் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தமிழகம் தலை நிமிரும்.

|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

உதயம் ராம் : 94440 11105

|//\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\|

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: