Monday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான

வாய்ப்புகள் எண்ணற்று இருக்கின்றன. ஆனால் இதில் உங்களது எதிர் காலத்தை அமைத்துக் கொள்ள விரும் பினால் தொன்று தொட்டு நடை முறையில் இருக்கும் திருமணங்களில் போட்டோ எடுத்துப்பிழைக்கலாம் என்பதுபோன்ற பழமையா ன சிந்த னைகளை நீங்கள் கைவிட வேண்டும்.

இன்று ஐ.டி., எனப்படும் இன்பர்மேஷன் டெக்னாலஜியின் பயன்பாடானது இல்லாத துறையே இல்லை எனக் கூற லாம். போட்டோகிராபியிலும் இதன் பயன் பாடு மிக அதிகமாக இருக்கிறது. இதனால் முன்புபோல தவறாக ஒரு போட்டோ எடுத்து விட்டாலுமே கூட கவலையின்றி அதைத் திருத்தும் சாப்ட்வேர்களும் அப்ளி கேஷன்களும் அதிகரித்துள்ளன. இன்று போட் டோகிராபர்களிடம் கேமரா இருக்கி றதோ இல்லையோ, கட்டாயமாக கம்ப்யூ ட்டர் சிஸ்டம் ஒன்று இருக்க வேண்டியுள் ளது.

குறிப்பிட்ட போட்டோசாப்ட்வேர்களில் ஒன்றைநீங்கள் சரளமாகக் கை யாளத் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கே கூறியுள் ளவற்றை அடிப்படைநிலையிலான போட்டோகிராபி துறைத் தேவை எனக் கூறலாம்.  பெரிய அளவில் செல்ல விரும்பினால் உங்களுக்கான வாய்ப்புகள் இவை தான்…

*படம்வரைதல் மற்றும் பெயின்டிங்போன்றவற்றுடன் போட்டோகிராபி ஆர்வமும் பெற்றவராக நீங்கள் இருந்தால், கிராபிக் டிசைன், அக்சசரிஸ் டிசைன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் போன்ற துறைகள் உங்களுக்குப் பொருந்தும்.

* பத்திரிகைத் துறையில் ஆர்வமுடையவராக இருந்தால், பத்திரிகைகள், ‘டிவி’ போன்றவற்று க்கான போட்டோகிராபர் பணி வாய்ப்புகளை நீங்கள் பெறலாம்.

* பேஷன், போர்ட்ரய்ட் போன்ற துறைகளிலும் போட்டோ கிராபர்களுக் கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.  பல ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு போட்டோ சொல்லும்என்பதால் இதில் உங்களது திறன்தான் உங்களுக்கான வாய்ப்புகளைக்கொண்டுவரு ம் . திறன்பெற நவீனதொழில் நுட்பத்தை நன்றாக நீங்கள் அறிவது அவசியம்.

=> தி.க‌ரன்

Leave a Reply