Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! – மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்!

ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! – மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்!

ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! – மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்!

பொதுவாக வயதிற்கு வருதல் என்பது ஆண் பெண் ஆகிய இருபாலாருக் கும் நடக்கும் ஒரு

Sandhyaசாதாரண நிகழ்வுதான்.  இதில் பெண்களுக்காவ து பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர் வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்குவருதல் அனுபவத்தைபற்றி பேசி பகிர் ந்துக் கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்குவரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது.

பாவம், ஆண்குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில் லை. இவன் வயதிற்குவந்தால், அம்போ என்று அப்படியே  விடப்படுகிறான். என்னஏது என்று சொல்லித்தர நாதியே இரு ப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் வயதுக்கு வருதல் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கலவரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர்கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப் கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, “அய் நான் வயதுக்கு வந்துட்டேனே,” என்றுஎண்ணி பெருமை கொள்ளவேண்டிய வாலிபன், “அய்யோ, எனக்கு வியாதி வந்துவிட்டது” என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.

”விந்து வெளியேறிவிட்டது, அதனால் சாகக் கிடக் கிறேன்” என்றபுகாருடன் ஆலோசனை பெறவரும் இளைஞர்களின் எண்ணிக்கை நல்லவேலையாக இப்போதெல்லாம் குறைந்துக்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவியலை புரிந்துக்கொண்ட அறிவாளிகள் ஆகிவிட்டார்கள்போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இப்பிரச் சனையோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூடநம்பிக்கைகளை தெளிவுபடுத்தி, அநாவசிய பதட்டத் தை தணிக்கும் மருந்துகளை கொடுத்தாலேபோதும், ” இதெல்லாம் ஒரு மேட்டருனு யாராவது கவலை படுவாங்களா!”என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள்.

=> மனநல மருத்துவர் ஷாலினி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: