Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!" – மு.க• ஸ்டாலின்

“எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!” – மு.க• ஸ்டாலின்

“எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!” – மு.க• ஸ்டாலின்

எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்! என்னுடைய முகநூல் பக்கத்தை

முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து வருவது எனக்கு மகிழ்ச்சி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத் தில் பதிவுசெய்துள்ளார். மு.க. ஸ்டாலினின் முகநூல் பக்கத் தில் பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் அவருடைய கருத் துக்கள்தானா என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஸ்டாலின், தமிழகத்தில் நடை பெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டு ள்ள புள்ளிவிவரங்களை மறுத் திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. அப்புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை. ஆகவே அப்புள்ளி விவரங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

எனினும் என்னுடைய முகநூல் பக்கத்தை முதலமைச்சர் தொடர்ந்து பார் த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலுள்ள தகவல்களின் அடிப்ப டையில் அவரது கணிணி மூலம் அவர் மாநிலம் முழுவதும் மெய்நிகர் சுற்றுபயணம்(virtual tour) சுற்றுப்பயணம் செய்து மக்களின் உணர்வுகளை, அவர்களது ஏமாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் செல்லும் “நமக்கு நாமே” பயணத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் என் முகநூலில் பதிவுசெய்துவருகிறேன். ஆகவே என்முக நூல் செய்திகளை முதலமைச்சர் தொடர்ந்து படித்தால் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் , கனவுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். முதலமைச்சரால் மக்க ளை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்துகொள்ள பொறுப்புணர்வோடு கூடிய அக்கறையில்லை என்றாலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள எனது முகநூல் பக்கம் அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்து க் கொள்ள விரும்புகிறேன்.

 
 
 
 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: