தேனியில் ஓர் ஆலயம்; அதிலோர் அதிசயம்!- மெய்சிலிர்க்கும் தகவல்கள்
தேனியில் ஓர் ஆலயம்; அதிலோர் அதிசயம்!- மெய்சிலிர்க்கும் தகவல்கள்
தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ முருகபெருமானின் திருக்கோவில் உள்ளது. அதாவது
தேனிமாவட்டம், கம்பம் சுருளி மலையில் உள்ள ஒருகுகையின்மீது அமைந்துள்ளது. . இதனருகிலே சுரபி எனும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகை ஒன் று காணப்படுகிறது இதில் ஈரம்பட்டு காய்ந்தமணல், அதன் பின் விபூதியாக (திருநீராக) மாறிவிடுகிறது. இக் கோவிலில் உள்ள ஒரு புனித மரத்தின்மீது தொடர்ந்து நீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அதுகாய்ந்தபின் பாறை யாக மாறிவிட்டது. மேலும் இதன் இலை, தழைகளிலெ ல்லாம் தொடர்ந்து 40நாட்கள் நீரில் நனைந்தபின்னர் , உறுதிமிக்க பாறையாக மாறி விடுகிறது என்கிறார்கள்.
இதனருகே காணப்படும் நீர்வீழ்ச்சி ஒன்று இசையோடு இணைந்து சுருதி ஒலி எழும்புவதால் அதனை சுருதி தீர்த்தம் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் சுருளி தீர்த்தம் என்றே மருவி பெயர் மாற்றம் பெற்று அதுவே வழக்காக மாறிவிட்டது.
அதுமட்டுமா? எத்தனை நாட்களும் எத்த னை காலங்களும் இந்நீர் இங்குள்ள பாறை கள் மீது கொட்டி தீர்த்தாலும் பாசியும் பிடி ப்பதில் அழுக்கும் சேர்வதில்லை என்கிறா ர்கள். இன்னும் ஒரு சிறப்பாக வழுக்கும் தன்மையே இல்லாமல் பளிச்சென்று காட்சி அளிப்பதுதான் அதிசயத்திலு ம் அதிசயமாக கருதப்படுகிறது.