‘மாமிசத்தை‘, கோயில் ‘பிரசாதமாக‘ கொடுக்கும் ‘பிராமண பூசாரி‘! – ஓர்அதிசயக் கோவில்
‘மாமிசத்தை’, கோயில் ‘பிரசாதமாக’ கொடுக்கும் ‘பிராமண பூசாரி’! – ஓர் அதிசயக் கோவில்
பொதுவாகவே, கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், சுண்டல் உட்பட
சில சைவ உணவு வகைகளையே கொடுப்பார்கள். அதற்கு காரணம் கோயிலில் பூசாரிகள் என்றழைக்கப்படும் நம்பூதிரிகள், சைவ பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். ஆனால், கேரளாவில் கண்ணூர் என்ற ஊரில் மாங்காவு தேவி கோவில் உள்ளது. இங்குவரும் பக்தர்களுக்கு மாமிசத்தை சமைத்து அதையே பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.
ஆம்! இந்த கோயிலில் பூசாரியாக இருந்துவரும், கேசவன் மூசா என்பவர் சுத்த பிராமணர் ஆவார். இருந்தும் இவர் கோழிகளை வளர்த்து தன் வீட்டி லேயே வைத்து கோழிகளை அறுத்து, சமைத்து, அதுவும் சிக்கன் 65 ஆக இதமாக ருசியாக வறுத்து, கோயிலுக்குவரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, இதுகாஷ்மீரி கலாசாரத்தை பின்பற்றும் கோவில்; எனவேதான் நான் மாமிசத்தை பிரசாதமாக வழங்கி வருகிறேன்… என்றார்.மேலும் அவர், தயவுசெய்து வீண் விமர்சனம் செய்யவேண்டாம் என்றும் மீறிசெய்தால் தெய்வ குற்றத் திற்கு நீங்கள் ஆளாவீர் என்றும்சொல்லி, கேள்விக்கேட்போரை அச்சுறுத் தி வருவதாகவும் ஒரு தகவல்!