அடிக்கடி வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் . . .
அடிக்கடி வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் . . .
தற்போதுள்ள நாகரீகமான அதேநேரத்தில் அவசர கதியில் செய்யப்படும் உணவு வகைகளையே
பலரும் விரும்பிச்சாப்பிடுகின்றனர். இதன் விளைவா க அதீத உடல் எடை யும் அதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலும் ஏற்பட்டு விரைவில் அதன் காரண மாக உடலும் உள்ளமும் சோர்வடைந்துவிடுகின்றன•. மெல்ல மெல்ல ஏதாவது ஒரு வியாதியும் கூடவே ஒட்டுண்ணி போல் ஒட்டிக் கொண்டு, மரணத்தில் படுக்கவைக்கும் அளவு க்கு விபரீதம் நிகழ்ந்து விடுவதுண்டு.
ஆகவே நமது உடல் எடையை சீரான வகையில் பேணிக் காக்கவும், சரியான உடலை பராமரிக்கவும் ஓர் எளிய உணவினை நம் முன்னோர் சொல்லியுள்ளனர். ஆம் அது என்னவென்றால், பால் கொதித்து இறக்கிய பின் அதில் சில வெள்ளரி விதைகளை போட்டு நன்றாக கலங்க வேண்டும். பின் அதனை அப்படியே குடிக்க வேண்டும். இதுபோன்று அடிக்கடி செய்து வந்தால், உடல் எடை கூடாது. அதே நேரத் தில் உடலும் வலிமை பெறும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.