திருக்குறளுக்கு “பாண்டவர் அணி” எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . – பயனுள்ள தகவல்
திருக்குறளுக்கு பாண்டவர் அணி எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . – பயனுள்ள தகவல்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐயன் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் உலகப் பொதுமறையாக
போற்றப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே! இத்திருக்குறளுக்கு பல அறிஞர்பெருமக்கள் தெளிவுரைகள் எழுதியு ள்ளனர். இருந்த போதிலும் சில நேரங்களில் நாம் படிக்கும் (அல்) விரும்பும் திருக்குறளுக்கு என்ன பொருள் என்பதை தெரிந்து கொள்ளும் பொருட்டு அதற்கான தெளிவுரையை நாம் படித்து தெரிந்து கொள்ள முயல்வோம் அச்சமயத்தில்
ஒருவரது தெளிவுரையை மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் திருக்குறளுக்கு பலர் தெளிவுரைகள் எழுதியிருந் தாலும், குறிப்பாக இலக்கிய உலகின் பாண்டவர்கள் என்று போற்றப்படும் அதாவது ஐந்துமாபெரும் அறிஞர்பெருமக்க ள் எழுதிய தெளிவுரைகள் கீழ்க்காணும் இணையதளத்தில் மிகவும் அழகாக தொகுக்கப்பட்டு நமது கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தாக படைக்கப்பட்டுள்ளது.
ஆம்,
திருக்குறளுக்கான தெளிவுரைகள் எழுதிய இலக்கிய உலகின் பாண்டவர் களாக விளங்கும் அந்த ஐந்து பேர் யார் யார் தெரியுமா?
தமிழ்த்திரு. கலைஞர் கருணாநிதி
தமிழ்த்திரு. மு. வரதராசனார்
தமிழ்த்திரு. சாலமன் பாப்பையா
தமிழ்த்திரு. பரிமேலழகர்
தமிழ்த்திரு. மணிக்குடவர்
மேற்காணும் ஐந்து அறிஞர்பெருமக்கள் எழுதிய திருக்குறள் தெளிவுரை கள் படித்துணந்தும் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து சுகமான அற வாழ்க்கைக்கு வழிகோலுங்கள்.
இணையதள முகவரி (இவ்வரியினை சொடுக்குக•)
தகவல்- சத்தியமூர்த்தி
Very goog