சென்னையில் நடிகை மரணம்! – சிகிச்சையின்போது உயிர் பிரிந்தது
சென்னையில் நடிகை மரணம்! – சிகிச்சையின்போது உயிர் பிரிந்தது
தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த, இவர் 1000 திரைப்படங்களுக்கு
மேல் நடித்து திரையுலகில் முடிசூடா ராணியாக திகழ்ந்து தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு கின்னஸ் சாதனை படைத்தவர், இவர் தொடக்கத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஆகியோருடன் மேடை நாடக நடிகையாக நடித்து வலம் வந்த இவர், பின்னர் மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியோருடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். நடிகர் நாகேஷுடன் இவர் நடித்த சரஸ்வதி சபதம் என்கிற திரைக்காவியத்தில் இவரது வசன உச்சரிப்பு மிகவும் பெரிதாக பேசப் பட்டது. ஆதாரம் சரஸ்வதி சபதம் திரைக்காவியம். இவர், வாழ்நாள்
சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு வயது,78 ஆகும்
.
Deep condolences. Let her soul rest in peace.