இரவில் தயிருடன் எதனை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது! – அற்புத தகவல்
இரவில் தயிருடன் எதனை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது! – அற்புத தகவல்
பாலில் இருந்து கிடைக்கும் உணவுதான் தயிர். இந்த தயிரை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வருவது நம் தமிழர்கள் பாரம்பரியமாக
கடைப்பிடித்துவரும் உணவுமுறை. பகலில் தயிர்சாதம் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலு ம் இந்த தயிரை இரவில் உண்ணக் கூடாது. மீறி உண்பவர்களுக்கு செரிமானக் கோளாறையும், சிலருக்கு மூச்சிரைப்பையும் உண்டாக்கும். மேலும் இரவு நேரத்தில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் இரத்தசோகை, காமாலை, தோல் நோய், இரத்தக் கொதிப்பு உண்டாக வாய்ப்புண்டு. இரவில் கட்டாயம் தயிர் சாப்பிட நேர்ந்தால், அந்த தயிரில் தேன் கலந்து, சீரகம் அல்லது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் இதனால் ஏற்படும் பாதிப்பு குறையும். மேலும் தயிர் சாப்பிடுவதைவிட மோர் சாப்பிடுவதே உடல் நலத்திற்கு ஏற்றது. மோரில் நீர் அதிகம் கலந்து அருந்தவேண்டும். அல்லது உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!