தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! – அவசியத் தகவல்
தம்பதிகள் எந்தெந்த காரணங்களால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரலாம்! – அவசியத் தகவல்
சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பமாக வாழ, இத்திருமணம் இணைப்பு பாலமாக
இருக்கிறது. அத்தகைய திருமணத்தில் இணையும் ஒரு ஆணும் பெண்ணு ம் ஒற்றுமையோடு, அன்யோன்யமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சிலகாரணங்களால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி ஆகிய இருவருமே பிரிந்துவிட நினைக்கிறார்க ள். அச்சமயத்தில் சட்டப்படி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின் றனர். இந்த விவாகரத்து எந்தெந்த காரணங்க ளுக்காக குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
ஆண் பெண் இருபாலாருக்கும் உள்ள பொதுவான உரிமைகள்
*கணவர் வேறொருபெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது மனைவி வேறோரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால்…
*தம்பதியரில் யாராவதுஒருவர் அதிகார தோர ணையுடன் கொடுமைபடுத்தினால்…
*இரண்டாண்டுகளுக்குமேல் யாராவது ஒருவர் அடிமை தனத்துடன் நடந் து கொண்டால்…
* தம்பதியரில் யாராவது ஒருவர் இந்து மதத் தைவிட்டு வேறுமதத்தை பின்பற்றினால்…
* தம்பதியரில் யாராவது மனநோயாளியாக பாதிக்கப்பட்டால், எய்ட்ஸ் உள்பட பாலின நோய் பெற்றிருந்தால், தொழுநோயால் பாதிப்பு அல்லது குணப்படுத்த முடியாத நோய் தாக்கும் பட்சத்தில்…
* யாராவது உலக பற்றில்லாமல் வாழ்ந்தால், தம்பதியரில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது திருமண விவகார உரிமையை மீண்டும் பெறுவத ற்கு நீதிமன்றத்தில் டிகிரி பெற்றுகொண்டுபின் ஓராண்டு முடிந்தால் கணவர் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவர் வேறொருவருடன் வாழ் ந்தால்…
*தம்பதியரில் யாராவது ஒருவர் 7ஆண்டுகள் காணாமல் போய் இருந்து, அவர் உயிருடன் இருக்கும் தகவல் உறுதியாக தெரியாத பட்சத்தில்…
*நீதிமன்ற உத்தரவின்பேரில் யாராவது ஒருவர் ஓராண் டு பிரிந்து வாழ்ந்து வாந்தால்…
பெண்களுக்கு மட்டுமே இருக்கும் கூடுதல் உரிமைகள்:-
* திருமணம் ஆனபின் கணவருக்கு ஏற்கனவே திரு மணமாகி முதல் மனைவி உயிருடன் இருப்பது தெரிந்தால்…
* கணவர் வேரு யாராவது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருந்தாலோ அல்லது சபல புத்தி யுடன் திரிந்தாலோ…
* எதிர்பாராத சூழ்நிலையில் கணவரிடம் ஜீவனாம்சம் அல்லது டிக்ரி நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட ஓரா ண்டுகாலத்தில் தம்பதிகள் தாம்பத்திய வாழ்வில் ஈடு படாமல் இருந்தால்…
* திருமணம் செய்துகொண்ட சமயத்தில் 15 வயதிற்கு ம் குறைவாக இருக்கும் பட்சத்தில் 18 வயது நிரம்பும் வரை திருமணத்தை நிராகரிக்கலாம்.
2pen kulanthaigal ullargal entral kulanthaigal Ammavidam thane tharuvargal…