புத்திரதோஷம்! – காரணங்களும், அதன் வகைகளும்!
புத்திரதோஷம்! – காரணங்களும், அதன் வகைகளும்!
ஒவ்வொருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றழைக்கப் படும் ஐந்தாம் வீட்டில்
ராகுவோ, கேதுவோ, அல்லது நீசமான கிரகங்கள் எது வாக இருந்தாலும், அவற்றின் தசாபுக்தி நடக்கும்பொ ழுது, திருமண மானால், அவர்களுக்கு புத்திர தோஷம் என்று அழைக்கப்படுகிறது. புத்திரதோஷம் என்பதை 9 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியம் இல்லாமை.
2. ஆண்வாரிசு இல்லாதது.
3. குழந்தைகள் பிறந்தும் அவர்களால் பெற்றோர்களு க்கு சந்தோஷமோ, அல்லது சுகமோ கிடைக்காது.
4. இளவயதில் புத்திரர்கள் நோயினால் காலாகாலமா க கஷ்டப்படுவது.
5. புத்திரர்கள் அல்லது புத்திரிகள் ஊனமுற்றவர்களாக பிறப்பது.
6. புத்திரன், அல்லது புத்திரி பெற்றோர்களை நட்டா ற்றில் விட்டுவிட்டு ஓடிப்போவது.
7. புத்திரர், புத்திரி நல்லபடியாக இருந்தும் பெற் றோர்கள் வயிற்றெரிச் சலை கொட்டிக் கொள்வது, பெற்றோர்களை கொடுமை படுத்துவது.
8. புத்திரர், புத்திரிகளால், பெற்றோர்கள், சொத்துக்காகவும், வேறு சில விஷயங்களுக்காகவும் கொல்லப்படுவது.
9. ஆசையோடு வளர்த்துவரும் பிள்ளைகள் நோயின் காரணமாகவும், விபத்தின் காரணமாகவும், நடுவயதி ல் அகாலமாக உயிர் துறப்பது,
என்று ஒன்பது வகையான புத்திர தோஷங்கள் உண்டு.
இவற்றில் சில தோஷங்கள், சிலகாலம் வரை நீடிக்கும். பல தோஷங்கள், பல வருஷங்களாக நீடிக்கும். மேலும் சில தொடர்ந்து கடைசிவரை வந்து கொண்டிருக்கும். இத்தனை தோஷ ங்களையும் தாண்டி குழந்தைகள் பிறப்பது, நல்லபடி யாக பிறப்பது, நல்லபடியாக படிப்பது, பெற்றோர்களுக் கும், குடும்பத்தினருக்கும் அனுகூலமாகஇருப்பது, நல்ல ஒழுக்கங்களுடன் திகழ்வது, குடும்பத்தின் பெருமை யை மேலும் பரப்புவது, போன்ற நற்செயல்கள், நற்குண த்தோடு, குழந்தைகள்பிறக்கத்தான் செய்கின்றார்கள். இது பெற்றோர்கள் செய்த புண்ணியம்.
=> மா மலர்