Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! – பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள்

பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! – பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள்

பேய், பிசாசுகள் 200 வருடங்களாக‌ வாழும் அதிர்ச்சி கிராமம்! – பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள்

மனிதர்களுக்குத் தேவையான அனைத்து நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இக்காலத்தில், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இன்னபிற வசதிகளுக்காக

பலரும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சுமார் 190 ஆண்டுகளுக்கு முன் 85 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒட்டு மொத்த மாக தங்கள் கிராமங்களை விட்டுச் சென்ற சம்பவம் கொஞ்சம் அதிர்ச்சி கலந்தது. ஏனெ னில் அவர்கள் அடிப்படை வசதிகளைத் தேடி இடம்பெயரவில்லை. பேய்களின் இடையூறுகளால் இடம்பெயர்ந்துள்ளன ர்.

ராஜஸ்தான்மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மெர் என்னும் மாவட்டத்தில் குல்தரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு எங்கு திரும்பினாலும் மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்களை மட்டு மே பார்க்கக்கூடிய, ஒரு சபிக்கப்பட்ட கிராம மாக கருதுகின்றனர். இக்கிராமத்தின் வரலாறு 1291-ம்ஆண்டில் இருந்து தொடங்குகிறது. பளிவால் பிராமணர்கள் என்ற சமூகத்தினர் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த கிராமம் இது. இதனுடன் இணைந்து சுமார் 84கிராமங்கள் இருந்துள்ளன. இந்நிலையில் சலிம்சிங் என்றதிவான், கிராம தலைவர் மகளின் அழகில் மயங்கி, அவளை அபக ரிக்கத் திட்டமிட்டான். இதன்படி அப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து தரவில்லை என்றால், மொத்த கிராமத்தையும் அழித்துவிடுவதாக எச்சரி த்துபல கொடுமைகளையும் செய்து வந்தான்.  அவ ருக்கு பயந்த 85 கிராம மக்களும் 1825-ம் ஆண்டு வாக்கில் கிராமத்தை மொத்தமாக காலி செய்துவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டனர் என்று இக்கிராமத்தின் வரலாறு கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இக்கிராமம் மனிதர்கள் வாழ்வதற்குதகுந்ததாக இருக்கக்கூடாது என்று கிராமமக்கள் சாபமிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி கடந்த 300ஆண்டுக ளாக இப்பகுதியில் மனிதர்கள் யாரும் வசிக்க வில்லை. அதையும்மீறி தங்கமுயற்சி செய்தா ல் இரவு நேரங்களில் அமானுஷ்ய உருவங்கள் தெரிவ தாகவும், விநோத குரல்கள் கேட்பதாகவும் கூறப்படுகி றது. இதனை சுற்றுலா பயணிகள் பலரும் அனுபவித் துள்ளதாகவும் சாட்சியம்கூறுகின்றனர். எனினும் இப் பகுதியை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா ப் பயணிகள் வந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

=> சஞ்சித்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: