Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

…. பெண்கள் ஒருவித ‘சைக்கோ’

… பெண்கள் ஒருவித ‘சைக்கோ’

…. பெண்கள் ஒருவித ‘சைக்கோ’

குடும்பம் என்பது அம்மா, அப்பா, அண்ண‍ன், தம்பி, அக்கா, தங்கை என்ற பாசவலைகள் நிறைந்த கூடு. அந்த அழகிய கூட்டில் வாழும் இன்றைய

பெண்கள் பல நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து பின்பு ஏற்படும் விபரீதங்களை சமாளிக்க‍ முடியாமல் தடம் மாறி உருக்குலைந்து போகின்றனர்.

வீட்டைவிட்டு ஓடிப்போவது எந்த பிரச்சனைக்காவது தீர்வா குமா? அதுவும் பெண்கள்?. பெண் சுதந்திரம் என்பதை வெகு தவறாகப்புரிந்துகொண்ட பல பெண்கள் இப்படி வீட்டைவிட்டு ஓடிப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். வீடு, உறவுக ள் எவ்வளவு பாதுகாப்பானது என்பது அந்த பாதுகாப்புக்குள் இருக்கும் வரை தெரியப் போவதில்லை.

ஏதோ ஒரு எழுச்சியில் யாரையோ பழிவாங்க அவர்கள் எடுக் கும் நடவடிக்கை பிறகு அவர்களுக்கே உபத்திரவமாக வந்துவிடுகிறது. கல்லூரி, அலுவலக ம் என்று சுதந்திரமாக செல்லும் பெண்கள், அந்த எல்லையை விட்டு மீறும்போது ஏற்படும் இன்னல்களைப் பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள். சுதந்திரம் என்பது மகிழ்ச்சியானது தான். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை மீறும்போது எப்படிப்பட்ட ஆபத்து வேண்டுமானாலும் வரலாம். வீட்டைவிட்டு ஓடிப்போவது ஒரு சமூக சீர்கேடு மட்டுமல்ல.

அவர்களுக்கே ஆபத்து என்பதை உணரவேண்டும். வீட்டை விட்டு ஓடிப்போவது ஒருவருடைய இயலாமையைக் காட்டுகிறது. பலவீன த்தைக் காட்டுகிறது. இன்றையபெண்கள் அறிவாளிகள் என்று சொ ல்லும் நாம் இதையெல்லாம் எந்த அறிவில் சேர்த்துக் கொள்வது? ஒரு பிரச்சினைக்குத் தீர்வு ஓடிப்போவதில் இல்லை. ஓடிப்போகும் பெண்கள் ஒருவித ‘சைக்கோ’ என்று சொல்லப்படும் மனநிலையை ஒத்தவர்கள். பெற்ற‍வர்களையும் மற்றவர்களையும் துன்புறுத்தி, அலையவைத்து மகிழ்ச்சியடைய நினைப்பவர்கள்.

இதனால் அவர்கள் எந்தவிதமான ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அவர் களுக்கே தெரியாது. பிரச்சனைகளை நேருக்கு நேர் நின்று எதிர்த்துப் போராடி ஜெயிப்பவ ர்கள் தான் தைரியமான பெண்கள். பெண்களின் அறிவு, பிரச்சனை காலத்தில் கைகொடுக்க வேண்டுமே தவிர வீட்டைவிட்டு ஓடிப்போக வழிதேடக்கூடாது. பிரச்சனை எதுவானாலும் அதை வீட்டிலிருந்தே சரிசெய்ய வேண்டும். வீட்டிலிருக்கும் பிரச்ச னைகளையே தீர்க்க முடி யாவிட்டால் இந்த பெரிய சமுதாயத்தி லுள்ள பிரச்சனைகளை எப்படி தீர்க்க முடியும்? சமீபத்தில் காசியா பாத் நகரில் நேகா என்ற பெண் கொலை செய்யப்பட்டாள்.

அது எப்படி தெரியுமா? நேகா ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு 111111111111111111 (1)ஓடிவந்து திருமணம் செய்துகொண்டாள். இரண்டு குழந் தைகள் பிறந்தது. வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டது. தீர்த்து வைக்க உறவுகள் இல்லை. அவள் கணவன், குழந்தைகளைவிட்டு வெளியேறினாள். வெளியில் வந்த அவளுக்கு ‘மேரட்’ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். சில நாட்களுக்கு பிறகு ‘‘பிலால்’’ என்பவரோடு தொடர்பு ஏற்பட்டது. அதை மேரட் கண்டித்த போது, ‘தான் ஒரு சுதந்திரப் பெண்’ என்று கூறினாள்.

சுதந்திரம் என்றால் இன்னதென்றுதெரியாத தன்மையை சுதந்திரம் என்றுநினைப்ப து எவ்வளவு பெரியஅறியாமை. இதனால் ஆத்திரமடைந்த மேரட் அவளை கொலை செய்துவிட்டான். வீட்டைவிட்டு வெளியேறிய முதல் கோணல், அவள் வாழ்க்கை யையே முற்றிலும் கோணல் ஆக்கிவிட்டது. ஓடிப்போகும் பெண்கள் வாழ்க்கையை விட்டே ஓடிப்போய்விடுகிறார்கள். அதனால் தெளிவாகசிந்தித்து நிதானமாக முடிவெ டுத்து, பெற்றோர் விருப்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

=> மா   மலர்

Leave a Reply