மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எந்தெந்த காரணங்களால் கோர முடியாது?
மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எந்தெந்த காரணங்களால் கோர முடியாது?
கணவன் மனைவி இருக்கிடையில் ஏற்பட்ட மனகசப்பு, குடும்ப நல நீதி மன்றத்தில்
விவாகரத்துவழக்கு தொடுக்கும் அறவிற்குபோய் நிற் கிறது. மேலும் இவர்கள் இருவர் தொடர்பான வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடந்துவரும் வேளையில் மனைவி தனது வாழவாதாரத்திற்காக கணவரிடம் ஜீவனாம்சம் பெறும் தகுதி உள்ளது. மேலும் வழக்கு செலவுக்கான தொகையும் கணவரிணம் கேட்டு பெற லாம். மேலும் ஒன் டைம் செட்டில்மெண்ட்ஆகவோ
அல்லது மாதாமாதம் ஒருகுறிப்பிட்டதொகையாகவோ ஜீவனாம்சமாக கோரலாம்.
ஆனால் இந்த சலுகை மனைவி வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் வரை மட்டுமே வழங்க முடியும். வழக்கு காலத்திலோ அல்லது ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டிருக்கும்போதோ, அந்த பெண் வேறு ஒரு ஆணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டால், அந்த மனைவி கணவனிடம் ஜீவனாம்சம் பெறும் உரிமையை இழந்துவிடுகிறார்.
மேலும் கணவர் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடரமுடியாது.