Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மங்கையரது அழகுக்கு அழகு சேர்க்கும் நல்மூலிகைகள்! – ஆரோக்கிய அலசல்

மங்கையரது அழகுக்கு அழகு சேர்க்கும் நல்மூலிகைகள்! – ஆரோக்கிய அலசல்

மங்கையரது அழகுக்கு அழகு சேர்க்கும் நல்மூலிகைகள்! – ஆரோக்கிய அலசல்

நம் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவில் மிக எளிதாக கிடைக்கும் சில வகை மூலிகள் மங்கையரது

ழகுக்கு அழகு சேர்ப்ப‍வையாகவும், மருத்துவ குணம் உடையதாகவும இருப்ப‍தை இன்றைய பெண்களுக்கு நமது முன்னோர்கள் சொல்லியிரு ந்தாலும் அவற்றை நாம் முற்றிலுமாக புறந்தள்ளி விட்டு செயற்கையான வாசனைத் திரவியங்கள், இரசாயனப் பொருட்கள்கலந்த அழகுசாதன க்ரீ ம்களை பயன்படுத்தி வருகிறார்கள். இவையெல் லாம் தற்காலிகமாக அழகாக காட்டுகின்றன•

அதுமட்டுமா! இந்த செயற்கை திரவியங்கள், க்ரீம் களால், விபரீதமான விளைவுகளுக்கு ஆளாகி, அவர்களது இயற்கையான அழகை இழந்து வாடு கின்றனர் என்பது பல இடங்களில் காணக்கூடிய காட்சிகளே! அந்த செயற்கை திரவியங்கள், இரசாயன பொருட்கள் கலந்த க்ரீம்களைப் போல்அல்லாமல் இவற்றில் எந்தவிதமான பக்க விளைவுக ளும் இல்லை

வெள்ளரிக்காய்

வெள்ளரி விதை, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவற்றைச் சருமத்தின்மீது பூசிக்கொள்ளச்சிகப்பழகு பெறுவது டன் பட்டுப் போன்ற மென்மையும் தரும். இதன் மருத்துவக்குணம் தீப்புண், வெயில் ஆகியவற்றால் ஏற்படும் சரும எரிச்சலைக் குளிரவைக்கும். இதன் சாறு உடலைக்குளிரவைப்பதுடன் சருமத்தைஅழகு படுத்தும். சருமத்துக்கு இதமானது என்பதுடன் ஈரப் பதத்தைத் தக்கவைக்கும். வெப்பக் காற்றுப்பட்டு வறண்டுபோகும் சருமத்தைக் குளிர்விப்பதால்தான், விஷயம் அறிந்த பெ ண்கள் வெள்ளரி சோப்பைப் பயன்படுத்துகின்ற னர்.

கற்றாழை

ஆரோக்கியம், புத்துணர்ச்சி ஆகியவற்றுடன் முதுமையைத் தடுக்கும் ஆற்றலும்கொண்டது கற்றாழை. சருமப்பிரச்னைகளுக்காகவே கற்றாழை பெரும்பாலும் பய ன்படுகிறது. தோல் அலர்ஜி, அக்கி, அம்மை, அரிப்பு, வெட்டு, சிராய்ப்பு, தீக்கா யம் ஆகியவற்றுக்குச் சிறந்தமருந்து கற்றாழை.

கற்றாழையின் தண்டில் சிறப்பான கூட்டுப் பொருட்கள் இருக்கின்றன. இதில் உள்ள வீக்க எதிர்ப்புச் சத்துக்கள் வலியைக் குறைப்பதுடன், தீப்புண், எரிச்சல் மற்றும் அரி ப்பைக்குறைக்கின்றன. மிகமுக்கியமாக இதில் உள்ள முதுமை எதிர்ப்பிகள் ஆரோக்கியத்தைப்பராமரிப்பதுட ன், சருமத்துக்குப்பட்டு போன்ற மென்மை, ஈரத் தன்மை, பாதுகாப்பு, புத்து ணர்ச்சி ஆகியவற்றையும் தருகின்றன. கற்றாழை ஜெல் உயிரணுக்கள் வளர்ச்சியை ஊக்கப்படு த்துவதுடன் சேதமடைந்த சருமத்தையும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் குளிர்ச்சியைத் தருகிறது.

வல்லாரை

வல்லாரையிலும் முதுமை எதிர்ப்பிகள் அதிகம் இரு ப்பதால் காஸ்மெடிக்ஸ் தயாரிப்பில் முக்கியஅங்கம் வகிக்கிறது. சீழ்ப்புரை, குழந்தைபிறந்தபிறகு வயிறு சுருங்குவதால் ஏற்படும் கோடுகளையும் தீர்க்கவல் லது. எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை நீக்கிச் சருமத் தைச் சுத்தப்படுத்தி மிருது வாக வைத்திருக்கும்.

துளசி

ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த மருந்து துளசி. குறிப்பாக முகப்பரு, முது மை, பேன், பொடுகு, பூச்சிக் கடி ஆகியவற்றுக்குச் சிறந்த நிவாரணி. கொ சுவை விரட்டும் தன்மை இருப்பதால் கொசு விரட்டிக ளில் இது பயன்படுத்துகிறது.

மஞ்சள்

ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன், சருமத்துக்குப் புத்துண ர்ச்சி ஊட்டி, ஆரோக்கியத்துடன் இயற்கையாக ஒளிர வைக்கும். வீக்கம், பாக்டீரியா மற்றும் முதுமை எதிர் ப்பிகள் இருப்பதால் முகப்பரு, தடிப்பு, கருந்திட்டுகள் மற்றும் சருமநோய்களுக்கான சிறந்த மருந்தாகும். உலர்சருமத்தை மென்மையாக்கி ச் சருமம் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கிற து.

சந்தனம்

ஆயுர்வேதமருத்துவத்தில் சந்தனத்தின் பயன்பாடு மிக அதிகம். அரிப்பு, சிராய்ப்பு, வறட்சி, சொறி, முகப்பரு உள்ளிட்ட பெரும்பாலான சருமப் பிரசனைகளுக்குத் தீர்வாகும். வெளிப்புறப் பயன்பாட்டில் எண்ணெய்யா கவும், பேஸ்டாகவும், லோஷனாகவும், சோப்பாகவும் பயன்படுத்தலாம். கடுமையான வெயிலில்கூட உடலைச் சில்லெனக் குளிர்விக்கும். 


 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: