Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்

அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!

அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்

பாதிக்க‍ப்படும் அப்பாவிப் பெண்களை பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட‍ 498ஏ என்ற சட்ட‍ப்பிரிவு ஆகும். ஆனால் 

பாதிக்க‍ப்படும் அப்பாவிப் பெண் களை பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட‍ 498ஏ என்ற சட்ட‍ப்பிரிவு ஆகும். ஆனால் “கணவன்குடும்பத்தாரைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணமு ள்ள பெண்களுக்கு வரதட்சணைக் கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற்கேற்ப காவல் துறையினரும் 498-A சட்டப் பிரிவு மற்றும் 406 ஆம் பிரிவையும் பயன்படுத்தி உடனே கணவன் சிறியவர்களைக்கூட கைது செய்வது சட்டப் படி சரியல்ல. இதுபோன்ற போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத் தியிருக்கிறார்.

இதேபோல உச்சநீதிமன்றத்திற்கு வந்த வழக் கில், “வரதட்சணைக்கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.. அதனா ல் இப்படிப்பட்ட வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிலரால் பயன் படுத்த முடிவதாக அறியப்படுகிறது. இதைத்தடுக்க சட்டப்படி பரிசீலிக்க வேண்டும்” என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறியிரு க்கிறார்.

இந்த இருதீர்ப்புகளும் மத்திய அரசின் கவன த்தைத் திசை திருப்பியது. சட்ட மத்திய உள்துறை அமைச்ச கமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாகப் பரிசீலித்தது. இறுதியில், வரதட்சணைக் கொடுமை செய்வதாக, பொய்ப் புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்குச் சட்டத்தைப் பயன் படுத்தக்கூடாது. தீர விசாரிக்காமல் கணவன் மற்றும் கணவ னின் குடும்பத்தினரை க் கைது செய்யக்கூடாது.

தீர விசாரித்து உயர் அதிகாரி திருப்திப் பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இதுதொடர்பாக எல்லா க்காவல்துறை மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்பவேண் டும் என்று மாநில அரசுகளுக்குச் சட்ட, உள்துறை அமைச்ச கம் ஒரு கடிதம் அனுப்பி யுள்ளது.

தங்களுக்குச் சாதகமாகச் சட்டப்பிரிவு இருக்கிறது என்று திட்டமிட்டு அப்பாவிக் கணவன்மார்களைப் பழிவாங்கும் மனைவிமார்களுக்கு எதிராக முதன்முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கை யை எடுத்துள்ளது.

நீதிமன்றங்களில் கருத்துகளுக்குப்பின் இந்நடவடிக்கையை மத்திய உள் துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

=>> வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: