பாண்டவர் அணி (நாசர், விஷால் மற்றும் கார்த்தி) வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
பாண்டவர் அணி (நாசர், விஷால் மற்றும் கார்த்தி) வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
இன்று காலையில் சரியாக 7.00 மணிக்கு தொடங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், மாலை 5 மணி வரை நடந்தது. இந்த தேர்தலில்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், மற்றும் திரைப்படம் மற்றும் நாடக நநடிகர், நடி கைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
6.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் சரத்குமார் அணியினர் முன்னிலையில் இருந்தாலும் பொது வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணியான பாண்டவர் அணியின் அசுர வேகத்தில் முன்னணி இடத்தை பிடித்தனர்.
தற்போது நிலவரம்
இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில்…
பதிவான நேரடி வாக்குகள் – 1,824
பதிவான தபால் வாக்குகள் – 783
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தலைவர் பதவிக்கான போட்டியில். . . (நாசர் வெற்றி)
நாசர் (பாண்டவர் அணி) -1334
சரத்குமார் (சரத்குமார் அணி) -1225
பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியில் . . . (விஷால் வெற்றி)
விஷால் (பாண்டவர் அணி) – 1445
ராதாரவி (சரத்குமார் அணி) -1038
பொருளாளர் பதவிக்கான போட்டியில். . .
(கார்த்தி வெற்றி)
கார்த்தி (பாண்டவர் அணி) – 1493
S.S.R. கண்ணன் (சரத்குமார் அணி) – 1080
>
>
>
செய்தி- விதை2விருட்சம்
மற்ற விவரங்கள் விரைவில் . . .