Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முத்தான யோசனைகள் – பயனுள்ள மருத்துவக் குறிப்பு

மூட்டுவலிக்கு முடிவு கட்டும் முத்தான யோசனைகள் – பயனுள்ள மருத்துவக் குறிப்பு

மூட்டு வலிக்கு முடிவு கட்டும் முத்தான யோசனைகள் – பயனுள்ள மருத் துவக் குறிப்பு

நாற்பது வயதை நெருங்கி விட்டாலே நாம் அழைக்காமல் வந்து விடும் நோய்களில் மிக

முக்கியமானது மூட்டுவலி. மூட்டுவலி ஆண் , பெண் என்ற பாகுபாடின்றி இரண்டு தரப் பினரையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்த மூட்டுவலி என்பது என்ன? இது எதனா ல் வருகிறது? தடுப்பது எப்படி? என்று பார்க் கலாம்.

மூட்டுவலி என்பது என்ன?

நமது உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவ்வெ லும்புகளை ஒன்றுடன் ஒன்று இணைத்திருப்பது மூட்டுகள்தான். மூட்டுகளில் இரண்டு வகை உண்டு.

1. அசையும் மூட்டுகள்
2. அசையா மூட்டுகள்

அசையா மூட்டுகளைப் பொருத்தவரை பிரச்னையில்லை. ஏனென்றால் அதில் எந்தவிதவலியும் தோன்றுவதில்லை . பெரும்பாலும் அசையும் மூட்டுகள்தான் இந்த வலித்தொல்லையைத் தோற்றுவிப்ப வை. மூட்டு வலி என்றால் மூட்டுகளில் ஒரு விதமான வலி இருக்கும். மூட்டுகளில் ` அழற்சி’ ஏற்பட்டிருக்குமாயின் வலி மற்றும் மூட்டுகள்உள்ள மேல் தோல்பகுதி சிவந்து காணப்படும். அப்பகுதியில் கை வைத்துப் பார்த்தாலே வெதுவெதுப்பான வெப்பமான உணர்வு இருக்கும். இது தவிர மூட்டைப் பயன்படுத்தும்போது அதாவது அசைக்கும் போது அதிகமான வலி இருக்கும்.

மூட்டுவலி எதனால் ஏற்படுகிறது?

மூட்டுவலி தோன்றுவதற்கு முக்கிய காரணம் மூட்டுகளில் தோன்றும் அழற்சியே. மற்றும் மூட்டுகள் எளிதில் அசைய அம்மூட்டுகளில் பசை போன்ற திரவம் இயற் கையாகவே சுரக்கும். இத்திரவம் எஞ்சினுக்கு கிரீஸ் மற் றும் ஆயில் எப்படி உதவுகிறதோ அதைப்போல உதவி, மூட்டுகளின் சிரமத்தை இலகு வாக்குகிறது. இதனால் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. இத்திரவம் குறையுமேயானால் எலும்புகள் நேரடியாக உரச ஆரம்பி த்து மூட்டுகள் தேய்ந்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே இம்மூட்டுவாதநோய் தோன்றுகிறது. இதனால் வலி தாங்க முடியாத அளவிற்கு ஏற்படுகிறது.

மூட்டுவலியைத் தடுப்பது எப்படி?

வருமுன் காப்பது வந்தபின் குணமாக்குவதை விடச் சிறந்தது. ஆகவே மூட்டுவலியைத் தடுக்க, உடல் எடையைக்கட்டுக்குள் வைத்திருக்க வேண் டும். ஏனெனில் நமது எடையை தாங்கி உடலை அசைய வைப்பது மூட்டுகளே.

படிக்கட்டுகள் ஏறும்போது மிகவும் கவனமாக ஏறவேண்டும். வேகமாக வோ அல்லது படிகளில் ஓடும் போதோ மூட்டுகளில் சுற்றியுள்ள சவ்வு பாதிக்கக் கூடும்.

நடைபயிற்சி மூட்டுகளில் திரவத்தை சுரக்கச் செய்து மூட்டுகளை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும்.

விளையாடும்போது மூட்டுகளுக்கான பாதுகாப்பு முறைகளை கையாள் வது அவசியம்.

உணவில் உப்புக் குறைவாக அல்லது சரியாகச் சேர்த்துக் கொள்ளுதல் மூட்டைப் பாதுகாக்கும்.

கீரை காய்கறிகள் மூட்டுகளைப் பலமானதாக்கும்.

அளவிற்கு அதிகமான மாத்திரைகள் அல்லது முறையான ஆலோசனையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

காலையில் 15லிருந்து 20 நிமிடம் மூட்டுகளுக்கென பயிற்சி செய்யுங்கள். மூட்டுவலி பற்றிய கவலையைவிட்டு விடலாம்.

– டாக்டர் வி.எம். சசிகுமார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: