Thursday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காஃபி எப்போது எப்ப‍டி குடிக்க‍ வேண்டும்? – மருத்துவர் கமலி ஸ்ரீபால்

காஃபி எப்போது எப்ப‍டி குடிக்க‍ வேண்டும்? – மருத்துவர் கமலி ஸ்ரீபால்

காஃபி எப்போது எப்ப‍டி குடிக்க‍ வேண்டும்? – மருத்துவர் கமலி ஸ்ரீபால்

நம் இந்தியர்கள் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்துதான் இந்த காஃபி என்ற

திரவுஉணவுக்கு அடிமையாகிவிட்டார்கள். தொடக்க‍ காலத்தில்எல்லாம் பசுவின் பாலை நன்கு காய்ச்சி, அதனை இளஞ் சூடான நிலையில் குடித்து வந்தனர். ஆனால் இன்றோ காஃபி குடிக்காமல் எந்த வேலையும் ஓடாது என்பது போன்ற நிலை வந்துள்ள‍து.

காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 பிஸ்கட் உடனோ காபி பருகுவது நல்லது. காலை எழுந்தவுட ன் எனக்கு காபி குடித்தால் தான் ஆச்சு என்பவர்கள் முதலில் 2-3 கிளாஸ் தண்ணீர் குடித்து பிறகு காபி குடிக்கலாம். காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற் பயிற்சி செய்வதற்கு 1மணி நேரம் முன்பு காபி குடிக்கலாம்.

உடற்பயிற்சி செய்த பிறகு காபி பருகுவதை தவிர்க்கவும். கறுப்பு காபி என சிலர் காபி டிகாஷனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். இதில் சர்க்கரையின் கலோரி சத்து சேரும். காபி க்கு கலோரி சத்து 8 அவுன்ஸிற்கு 2 கலோரி ஆகும்.

பொதுவாக நம் நாட்டில் பால் சேர்த்த காபி குடிக் கும் பழக்கம் அதிகமாக உள்ளது. அதனை டிகிரி காபி என்றும், ஸ்ராங் காபி என்றும் பல பெயர்க ளில் அருந்தும் காபி பிரியர்கள் அதிகம். ஸ்டிராங் காபி பொதுவில் அசிடிடி பிரச்சனையை அதிகரிக் கச் செய்யும்.

ஆக கருப்பட்டி காபி அல்லது சாதாரண பால்சேர்த்த காபியே நல்லது. சர்க்கரை மாத்திரைகள் பொதுவாக வேண்டாம் என் றே அறிவுறுத்தப்படுகின்றது. பனை சர்க்கரை, கருப் பட்டி ஆகியவற்றை அதிகம் பயன்படுத்த சிறுவயது முதல் பழக்கப்படுத்தப்பட்டால் சர்க்கரை உபயோக ம் வெகுவாக குறையும்.

=> டாக்டர் கமலி ஸ்ரீபால்.

டாக்டர் கமலி ஸ்ரீபால்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: