Thursday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பசிக்கும்போது சாமை அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடும்போது . . .

பசிக்கும்போது சாமை அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடும்போது . . .

பசிக்கும்போது சாமை அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடும்போது . . .

சாமை அரிசி என்பது தானிய வகையைச்சேர்ந்தது. இது நெல்லரிசியைக் காட்டிலும்

ஏழு மடங்கு நார்சத்து கொண்டதாகும். இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவுநோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட சிறந்த வாய்ப்பாக அமையும். சாமையில் இரு ம்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம்.

இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறை க்கிறது. இளம்பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. பொதுவாக முதியவ ர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் பெரும்பிரச்சனை யாக உள்ளது. உடம்பிலிருந்துகழிவுகள் சரிவர வெளியேறவில்லை என்றாலே அது மற்ற நோய் களுக்கு மூல காரணியாக அமைந்து விடும்.

சாமைசோறு, சாமைபொங்கல், சாமைஇட்லி, சாமை தோசை, சாமை உப்புமா, சாமை இடியாப் பம், சாமைபுட்டுபோன்ற சாமை அரிசியில் செய்த உணவுகளை பசித்தபின் சாப்பிடும்போது நோய்களுக்கெல்லாம்மூலமா க கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபடமுடியும். இதுமட்டுமல்லாமல் வயிற்றுக்கோளறுக்கு சாமைஅரிசி நல்லதொரு மருந்தா கவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித் து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமை யின் பங்கு குறிப்பிடத்தக்கது.       

இக்காலத்தில், அதிகளவுதேவையில்லாத கொழுப்பையும் ,சர்க்கரை பொருட்களையும்தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை உண்பதைத்தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கொள்ளு ம் போது உடல் உதிரியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கு ம் என்பது நிச்சயம்.

=> மா   மலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: