இந்துமதப்படி திருமணம் செய்வோர் பின்பற்றவேண்டிய சட்டவிதிமுறைகள்
இந்துமதப்படி திருமணம் செய்வோர் பின்பற்றவேண்டிய சட்டவிதிமுறை கள்
இந்து மதத்தை சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது
பின்பற்றப்படவேண்டிய சட்ட விதிமுறைகளை இங்கே காண்போம்.
1. திருமணம் செய்து கொள்ளும் ஆண் அல்லது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி உயிருட ன் துணை இருக்ககூடாது.
2. திருமணம் நடக்கும் சமயத்தில்.
*மணமகன், மணமகள் இருவரும் மனரீதி யாக தெளிவானவர்களாக இருக்கவேண்டு ம். திருமணம் செய்துகொள்ள இருவரின் மன பூர்வமான ஒப்புதல் இருக்க வேண்டும். மண மக்கள் ஒருவரை ஒருவர் விருப்பமில்லாமல் திருமண பந்த்திற்குள் செல்பவர்களாக இருக் ககூடாது.
* மணமக்கள் மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்பவர் களாக இருக்ககூடாது.
*திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் மணமகனு க்கு 21, மணமகளுக்கு 18 வயது முழுமையாக பூர்த்தி யாகி இருக்க வேண்டும்.
* மணமக்கள் பொருந்தாத உறவினர்களாக இருக்ககூடாது.
* மணமக்கள் உறவினர்களாக இருக்ககூடாது.
* மணமக்கள் ஒரே வகுப்பை சேர்ந்தவராக இருந்து, அவரவர் சம்பிரதாய ங்களுக்கு உட்பட்டு திருமணம் செய்துகொண்டால், அதுசட்டபூர்வ திருமணமாகும். ஒருவேளை வெவ்வேறு வகுப்பினராக இருக்கும் பட்சத்தில் 7 ஆண்டுகள் முடிந்தால் மட்டுமே சட்டப் படியான திருமணமாக அங்கீகரி க்கப்படும்.
இந்து திருமண சட்டம்-1955:-
திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக நம் நாட்டில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி ஆகிய மதங்களுக்கு தொடர் புடைய வெவ்வேறுசட்டங்கள் உள்ளது. அதன் படி இந்து திருமணசட்டம்-1955, (இது இஸ்லாமியர், கிறிஸ்துவர், பார்சி, யஹொதி மதங்களை தவிர்த்து) இந்துமதத்தை சேர்ந்த 1. வீர சைவர், லிங்காயத்து, ஆர்யா, சமாஜம், பிராமண சமாஜம் உள்பட இந்துமத வழிபாடுகளை பின்பற்றும் அனைத்து சாதி, மொழியினருக்கும். 2.பவுத்தம், ஜெயின், சீக்கி ய மதங்களை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது.