நடிகர் சங்க பிரச்சனை- பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பால் சரத்குமாருக்கு நெருக்கடி
நடிகர் சங்க பிரச்சனை- பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பால் சரத்குமாருக்கு நெருக்கடி
தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ளது. இந்த சங்கம் இருக்கும் நிலத்தை,
‘S.P.I. சினிமாஸ்’ நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியது தொடர்பான ஒப்பந்தம், இன்னும் முறையாக ரத்தாகவில்லை என்பது பதிவுத்துறை ஆவணங்கள் வாயிலாக தெரிய வந் துள்ளது. நடிகர் சங்கத்துக்கு சொந்த மாக, 18கிரவுண்ட், 2,061சதுரடி நில ம் உள்ளது. இந்த நிலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, அடுக்கு மாடி தியேட்டர் வளாகம் கட்ட முடி வு செய்யப்பட்டது. நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார், பொதுச் செயலராக இருந்த ராதாரவி ஆகியோர் தலைமையில் எடுக்கப்பட்ட இ ந்த முடிவால், நடிகர்களிடம் சர்ச்சை வெடித்தது.இது தொடர்பாக, நடிகர்
சங்க உறுப்பினர் தொடர்ந்த வழக்கு உயர் நீதி மன்ற விசாரணையில் உள்ளது. சரத்குமார் அணியின் இந்த முடிவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கிய வி ஷால் அணி, சமீபத்தில் நடைபெற்ற தென்னி ந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்றது.
ஆதார கடிதம்இதையடுத்து, நடிகர்சங்க நிர் வாகம் விஷால்அணி கைக்கு மாறிஉள்ளது. தேர்தலில் தோல்வி அடைந் த சரத்குமார், நேற்று முன்தின ம், சென்னையில் செய்தியாளர்களை சந்தி த்தார். அப்போது, நடிகர் சங்க நிலத்தி ல் புதிய கட்டடம் கட்ட, SPI சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த த்தில் தவறு இருப்பதாக விஷால் அணியினர் கூறிவரும் குற்றச்சாட்டு களை மறுத்தார். மேலும், சர்ச்சைக் குரிய இந்த ஒப்பந்தத்தை செப்., 29ம் தேதி யே ரத்துசெய்துவிட்டதாக கூறி, அதற் கு ஆதாரமாக, ஒரு கடிதத்தையும் செய்தியாளர்களிடம் காட்டினார். ஆவணம் பதிவாகவில்லை இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறி யதாவது: கடந்த, 2010
நவம்பர், 25ம்தேதி, நடிகர் சங்க, ‘சாரிட்டபிள் டிரஸ்ட்’ சார்பில், S.P.I. சினிமா ஸ் நிறுவனம் பெயருக்கு, நடிகர் சங்க நிலம், 30 ஆண்டு குத்தகைக்கு அளிக்கப்படுவதாக ஆவணம் பதிவு செய்யப்பட்டது.
தி.நகர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான ஆவணம் பதிவானது. இருதரப்பினரும் ஒப்பந்தத்த தை ரத்து செய்வதாக இருந்தால், இதற்கான ரத்து ஆவணத்தில் கையெழுத்திட்டு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் குத்தகைஒப்பந்தம் முறைப்படி ரத்தாகும். எனவே, தற்போதைய நிலவர ப்படி, இத்தகைய ரத்து ஆவணம் எதுவும் இன்னும் பதிவாகவில்லை. எனவே, நிலத்தின்மீதான குத்தகை உரிமை, தனியார் நிறுவனம் பெயரி லேயே உள்ளது. இவ்வாறு பதிவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக தெரிவித்தனர். இ தனால் இப்பிரச்சனையால், நடிகர் சங்கத் தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்று ம் முன்னாள் செயலா ளர் ராதாரவி ஆகிய இருவருக்கும் நெருக் கடி ஏற்பட்டுள்ளது.
=> தினமலர்