வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாதவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்கள்
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாதவர்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்கள்
வருமான வரி கணக்குத் தாக்கல்: கெடு தேதி தவறியதால் என்னென்ன பாதிப்புகள்?
வழக்கமாக, ஆடிட்டரின் தணிக்கை தேவைப் படாத வரிதாரர்கள் அவர்க ளின் வருமான வரி கணக்கை, முடிந்த நிதி ஆண்டை
தொடர்ந்து வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்தஆண்டு (2015) வருமானவரி புதிய படிவங்கள் வெளிவர தாமதம் ஆனதால் கெடு தேதி ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும் அதி கம் பேர் வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எ ன்பதால் செப்டம்பர் 7ம்தேதிவரை நீட்டிக்கப்பட்ட து. அப்படியும் நம்மில் பலர் வரி கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள்.
வரி கணக்கைத் தாக்கல் செய்யாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், இப்படி தாக்கல் செய்யாதவர்கள் எந்தத் தேதி வரைக்கும் வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
“வருமான வரியை மிச்சப்படுத்த மார்ச் 31-ம் தேதிக் குள் முதலீடுசெய்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுமுக்கியம் கெடுதேதிக்கு முன் வருமான வரி கணக்கை தாக்கல்செய்வ து.
தற்போதையசூழ்நிலையில் முடிந்த 2014-15 -ம் நிதி ஆண்டுக்கு 2016 மார்ச் 31 வரைக்கும் அபராதம் மற்றும் வழக்கு எதுவும் இல்லாமல் வரிகணக்கு தாக்கல் செய்யமுடியும். வரி பாக்கி இருந்தால், அந்த வரி மற்றும் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு 1% தனி வட்டி சேர்த்து கட்ட வேண்டும். வரியைக் கட்டிவிட்டு அதன்பிறகு வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி எதுவும் கட்டத் தேவை இல் லை என்றால் நேரடியாக ரிட்டர்ன் தாக்கல் செய்து விட லாம்.
அப்படியும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வில்லைஎன்றால், 2014-15ம் நிதி ஆண்டுக்கான வரி கணக்கை மார்ச் 31, 2017வரை தாக்கல்செய்யலாம். இதை தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்தல் (Belated Return)என்பார்கள். இப்படிசெய்யும்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்க கூடும் அல்லது வழக்கு தொடரக் கூடும்.
அபராதமா, வழக்கா என்பது சம்பந்தப்பட்ட வருமான வரி அதிகாரியைப் பொறுத்து இருக்கிறது. அபராதம் என்கிற போது ரூ.5,000 வரைக்கும் விதி க்கப்படலாம். கட்ட வேண்டிய வரி பாக்கி ரூ.25 லட்சத்துக்குள் இருக்கும் போது வழக்கு தொடரப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 மாதத்திலி ருந்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதி க்கப் படலாம்.
கட்டவேண்டிய வரி ரூ.25 லட்சத்துக்குமேல் இரு ந்தால் 6மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை இருக்கும். 2014-15-ம் நிதி ஆண் டுக்கான வரி கணக்கை 2017, மார்ச் 31-க்கு பிறகு தாக்கல் செய்ய முடி யாது.
வருமான வரி கணக்கு தாக்கல் கெடுதேதியைத(2014-15 நிதியாண்டுக்கு செப்டம்பர் 7) தவறவிடும்பட்சத்தில் வரிக் கணக்கு ஐடிஆர் படிவத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனைத் திருத்தி, திருத்தப்பட்ட வரி கணக்கு தாக்கல் (Revised Returns) செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. அதனால் செய்யப்பட்ட முதலீடு அல்லது செலவுகளுக்கான வரி சலுகையை கோரி பெற தவறி இருந்தால், அதனைப் பெறமுடியாமல் போய்விடும்.
கெடுதேதிக்குள் வரி கணக்கை தாக்கல் செய்யும் பட்சத்தில், குறுகிய கால மற்றும் நீண்ட கால மூல தன இழப்பை அடுத்துவரும் 8 ஆண்டுகளுக்கு எடு த்துச் செல்லமுடியும். இந்தக் கெடு தேதியைத் தவறவிட்டுவிட்டால் உங் களுக்கு முதலீடு மூலம் ஏற்பட்டிருக்கும் இழப்பை அடுத்துவரும் ஆண்டு களுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
வரிகணக்கு தாக்கலை தாமதமாகச் செய்யும்போது, கூடுதலாக வருமான வரி கட்டியிருக்கும் பட்சத்தில் ரீ-ஃபண்ட் கிடைக்க தாமதமாகும். ஒருவரு க்கு ரீ-ஃபண்ட் இருக்கிறது என்றால், அவர் எப்போது வரி கணக்கு தாக்கல் செய்கிறாரோ அப்போதிலிருந்துதான், ரீ-ஃபண்ட் தொகைக்கு வட்டி கண க்கிடப்படும். எனவே, தாம தமா க வரிகணக்கை தாக்கல் செய்தால், ரீ-ஃபண்ட் வரவேண்டியிருந்தால் குறைவான வட்டிதான் கிடை க்கும்.
சிலசமயங்களில் வரிசலுகைக்கான ஆவணங்களை பணி புரியும் அலுவலகத்தில் சரியானநேரத்தில் கொடுக்கமுடியாமல் போய் இருக்கும். அப்போது உங்களின் வரி சலுகைக்கான முதலீடு அல் லது செலவுவிவரம் முழுமையாக ஃபார்ம் 16-ல் இடம்பெறாமல் போய் விடும்.
ஆனால், படிவம் 16 என்பது டிடிஎஸ் பிடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் மட் டுமே. ஒருவர் ஏதாவது வரி சலுகையை க்ளெய்ம் செய்ய மறந்துவிட்டா ல், அதனை வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கோரிப் பெறலாம்.
இந்நிலையில் ஒருவர் கெடுதேதிக்குள் வரிகணக் கு தாக்கல் செய்யும் பட்சத்தில், விடுபட்ட முதலீடு அல்லது செலவுக்கான ஆதாரங்களை (ஆயுள் காப்பீடு பிரீமியம், ஆரோக்கிய காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பக் கட்டும் அசல் மற்றும் வட்டி, மருத்துவச் செலவு, உள்ளிட்டவை) வரி கணக்கு தாக்கல் படிவத்துடன் இணைத்துக் கொடுத்து ரீ-ஃபண்ட் வாங்கிக் கொள் ளலாம்.
ஆனால், படிவம் 16 என்பது டிடிஎஸ் பிடிக்கப்பட்டதற்கான சான்றிதழ் மட்டுமே. ஒருவர் ஏதாவது வரி சலுகையை க்ளெய்ம் செய்ய மறந்துவிட் டால், அதனை வரி கணக்கு தாக்கல் செய்யும்போது கோரிப் பெறலாம்.
இந்த நிலையில் ஒருவர் கெடு தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்யும்பட்சத்தில், விடுபட்ட முதலீடு அல்லது செலவுக்கான ஆதாரங்களை (ஆயுள் காப்பீடு பிரீமியம், ஆரோக்கிய காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பக் கட்டும் அசல் மற்றும் வட்டி, மருத்துவச் செலவு, உள்ளிட்ட வை) வரி கணக்கு தாக்கல் படிவத்துடன் இணைத்துக் கொடுத்து ரீ- ஃபண்ட் வாங்கிக் கொள்ளலாம்.
கெடுதேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், சில வரி சலுகைகளை கோரி பெற மறந்திருந்தால், ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தி ல் அதனைக் குறிப்பிட்டு ரீ-ஃபண்ட் கோரலாம்.
இந்த ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். முதல்முறை வரி கணக்கு தாக்கல் செய்த நிதி ஆண்டு இறுதியிலிருந்து இரு ஆண்டுகளுக்குள் எத்தனை முறை வேண்டு மானாலும் ரிவைஸ்டு ரிட்டர்ன் படிவத்தை தாக்கல் செய்யலாம்.
வரி கணக்குத் தாக்கலை ஆன்லைனில் செய் திருந்தால் ஆன்லைனிலும், ஆஃப்லைனில் செய்திருந்தால் ஆஃப்லைனிலும்தான் ரிவை ஸ்டு ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும். ஆன்லைனிலே தாக்கல் செய்வது நல்லது
சரியானதேதியில் வரி படிவங்களை வெளியி ட நீதிமன்றம் அறிவுறுத்தல்!
வணிகம், வர்த்தகம் நிறுவனங்களின் டேர்னோவர் ரூ.1 கோடிக்கு மேல் மற்றும் டாக்டர், வக்கீல், ஆடிட்டர் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த வந்த வர்களுக்கு தொழில் வருமானம் ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஆடிட்டர் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கெடுதேதி செப்ட ம்பர் 30, 2015-ஆக இருக்கிறது. இவர்கள் ஐடிஆர் 4, 5 அல்லது 6 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இந்தபடிவங்கள் ஏப்ரல்முதல் தேதியி ல் வெளிவரவேண்டிய நிலையில், ஆகஸ்ட் மாத கடைசியில் நாலரை மாதம் தாமதமாக வெளியி டப்பட்டது. மீதியுள்ள ஒன்றரை மாதத்தில் அனைவரும் வரி கணக்கு தாக்கல் செய்ய வேண் டியநிலை. இப்போதுவரை தேதி நீடிக்கப்பட வில்லை. இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், இனிவரும் ஆண்டு களில் ஏப்ரல் முதலே வரி படிவங்களை அரசு கட்டாயம் வெளியிட வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவு றுத்தி உள்ளது.
=> சி.சரவணன்