Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைக ளும்!

வாயுத் தொல்லை ஏற்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம் ஏனென் றால், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை சாதரணமாக

ஏற்படக்கூடியது. சரியான உணவுப்பழக்கத்தை மேற்கொ ண்டால் இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். ஒருவர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வாயுத் தொல்லை ஏற்பட காரணம் :

உணவு செரிமானமாகி, ஒருபகுதி வயிற்றில்இருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. மீதி உணவுபெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்சமீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந் து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லா தவரைக்கும் பிரச்சனை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல் நலக் கோளாறுக்கான அறிகுறியா எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.

வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். மொ த்தம் 3 வகையாக வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைப் பிரிக்கலா ம்.

அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள்

பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை …….

மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள்

ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட்…………

குறைந்த வாயுவை வெளியேற்றும் உணவுகள்

முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி ……….

வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்னதான் வழி?

சமைத்த உணவை சாப்பிடும்போது, கூடவே பச்சைக்காய்கறி, பழங்களை சாப் பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, சிறிது இடைவெளி விட்டு, பிறகு சமைச்ச உணவை சாப்பிடுவது நல்லது.

காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைத்த உண வோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டா க்கும்.

சிலபேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம்.

மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கி றதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறையும்.

வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம் பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, வாயு பிரச்சினை குறையும்.

கிழங்குசாப்பிட்டா முதுகுபிடிச்சிருச்சு, கடலைசாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறை ய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப் பகுதி ல மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சனைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.

சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலு க்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலை யை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.

பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ளில் நிறைய சாப்பி டாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம், இஞ்சி காபினு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.

=> ஸ்வாதி, வலைதமிழ்

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: