Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும் முறைகளும்! – இளம்தாய்மார்களின் கவனத்திற்கு . . .

குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும் முறைகளும்! – இளம் தாய்மார்களின் கவனத்திற்கு . . .

குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும்முறைகளும்!- இளம்தாய்மார் களின் கவனத்திற்கு . . .

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு

பேஸ்ட்போல் செய்து (ஆப்பமாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பே ஸ்ட்போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டா கவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, அப் படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

வாழைப்பழம்

ரு(முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றா க மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலா ம்.

ஆப்பிள்

ஆப்பிளை இட்லிதட்டில் வேகவைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்க லாம். சிலகுழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்க லை உண்டாக்கிவிடும். அப்பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்:

இந்த‌ ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொ ழுப்புச்சத்து அதிகம். நன்றாகபழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைக ளுக்கு கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். அ தனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர்கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழம்

இந்த‌ பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேக வைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டா

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழவகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக்கொடுக்கலாம். constipationக்கு பப்பாளிப் பழத் தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

>

=> அஜீஸ் அகமது

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: